‘மோகினி’ ஆறு முதல் அறுபது வரையிலான எல்லோருக்கும் பிடிக்கும்! – இயக்குநர் நம்பிக்கை!

‘மோகினி’ ஆறு முதல் அறுபது வரையிலான எல்லோருக்கும் பிடிக்கும்! – இயக்குநர் நம்பிக்கை!

சூப்பர் ஹிட் படமான சூர்யா நடித்த “சிங்கம் 2” படத்தை தயாரித்தவர் எஸ். லட்சுமண் குமார். இவரின் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புதிய படம் “ மோகினி “.பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த R. மாதேஷ். இப்படத்தை கதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்கி இருக்கிறார். கடந்த பதினைந்து வருடங்களாக ஹீரோயினாக வலம் வரும் த்ரிஷா அண்மையில் வெளியான நாயகி – க்குப் பின்னர், மீண்டும் ஹாரர் வகைப் படத்தில் நடித்துள்ளார். முழுக்க ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘மோகினி  படத்தில் த்ரிஷாவுடன், சுரேஷ், ஜான் பாக்னனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமையல் வல்லுநராக இந்தப் படத்தில் த்ரிஷா நடித்திருக்கிறார். குரு – மெர்வின் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை அண்மையில்தான் வெளியிட்டார்கள்.

இதன் இறுதிக் கட்டபணி நடந்து வரும் சூழ்நிலையில் இயக்குநர் மாதேஷை சந்தித்து பேசிக் கொண்டிருந்தோ. அப்போது அவர், “இது பக்கா பேமிலி எண்ட்டர்டெயிண்ட்மெண்ட் படம். த்ரிஷா -வுக்கு இந்தப் படம் முக்கியமான படமாக இருக்கும். ஏன்னா, இந்தப் படத்தில் வித்தியாசமாக ஆக்‌ஷனெல்லாம் செய்திருக்கிறார். ரோப் எல்லாம் கட்டி ஒரு ஹீரோ எப்படிச் சண்டை போடுவரோ அதே மாதிரி ரொம்ப ஆக்ரோஷமாக இந்தப் படத்தில் த்ரிஷா சண்டை போட்டிருக்கிறார். இன்னொரு விஷயம் சொல்லணும் – இது ஒரு ஹாரர் படமாக இருந்தாலும், படத்தில் காமெடிக்குப் பஞ்சமே இருக்காது. படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு புது லொகேசன்களை ரிச்சாக காட்ட வேண்டும் என்பதால் இந்தப் படத்தின் கதை முழுவதும் லண்டனில் நடப்பது போல் எடுத்திருக்கிறேன். கூடவே பாங்காங், ஸ்விஸ் போன்ற நாடுகளிலும் ஷூட் செய்திருக்கிறோம்.

ஹாரர் அப்படிகிற விஷயத்தைத் தாண்டி படத்தில் நம்ம நாட்டுக்குத் தேவையான மெசேஜ் இருக்கிறது. அத்தோட கதையின் மெயின் பாயிண்டா இப்போதைய சமாச்சாரம் உண்ணையும் வைத்திருக்கேன். இந்தப் படத்தோட ஸ்க்ரிப்ட் கேட்டுட்டு நடிகர் மாதவன் இந்தக் கதையை ஹீரோவை மையமாக வைத்து எழுதி என்னிடம் கொடுங்கள். இந்தியில் நான் நடிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறாரான்னு பாத்துக்கங்களேன்.

வழக்கமான பேய் ஒரு பாழடைந்த பங்களாவுள் செய்யும் அலப்பறையை மட்டும் பார்த்து வந்த தமிழ் ரசிகருக்கு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான  இந்த ‘மோகினி’ ரொம்ப புதுசா இருக்கும். ஆரம்பத்தில் இந்தப் படத்தின் கதையை த்ரிஷாவிடம் சொன்னவுடன், ‘என்னால், இந்தக் கதையில் நடிக்க முடியுமா’னு டவுட்டாக இருக்கிறது என்றார். நான்தான் அவருக்கு நம்பிக்கை கொடுத்தேன். இதில் நடிக்க அவர் உடல் வாகு ரொம்ப உதவியா இருந்துச்சு.. கண்டிப்பாக இந்த ‘மோகினி’ ஆறு முதல் அறுபது வரையிலான எல்லோருக்கும் பிடிக்கும்.” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்,

error: Content is protected !!