மோடி கையில் எடுத்த சூலாயுதம்!?!

மோடி கையில் எடுத்த சூலாயுதம்!?!

ந்த ஆயுதம் வேறெதுவும் இல்லைங்க, PMLA (Prevention of Money Laundering Act), அதனால் பாசிச மோடி ஒழிக என கதறும் பல கறைபடிந்த அரசியல் வியாதிகள்!?! ஏன்? அதில் அப்படி என்ன சூட்சுமங்கள் மறைந்திருக்கிறது?

Note:பதிவுகள் நன்றாக இருந்தாலும், மிக நீண்டதாக இருப்பதாக நண்பர்கள் சிலரின் கருத்துக்கு ஏற்ப கொஞ்சம் சுருக்கமாக கொடுக்க நினைக்கிறேன். அதில் கவரேஜ் முழுமை அடையாவிட்டால் கமெண்ட் செய்யுங்கள். நன்றி

PMLA என்பதில் அப்படி என்ன விஷேசம்?

உதாரணமாக, யரோ ஒருவர் தவறாக சம்பாதித்த ஒரு கோடியை என் வீட்டிற்கு முன்பு சாக்கு பையில் தவற விட்டு சென்று வீடுகிறார். அதை நான், பார்த்ததும் எனக்கு இருந்த ஏகப்பட்ட கடன் சுமையால் கமுக்கமாக லபக்கி எடுத்துக் கொள்கிறேன். அதைக்கொண்டு கடன்களை கொஞ்சம் அடைத்துவிட்டு பல ஆடம்பர செலவுகளை செய்த பின்னரும் 60 லட்சம் பேங்கில் டெபாஸிட் செய்யனும், ஆனால் அந்த வருமானத்திற்கு கணக்கு கேட்கிறார்கள் என்பதால், வங்கியில் செலுத்த முடியாமல் வீட்டில் வைத்திருக்கிறேன். அதை பல நண்பர்கள் உறவுக்காரர்களிடம் கொடுத்து, அதை கட்டுமரம் போல ஒன்றன் பின் ஒன்றாக என் அக்கவுண்டில் கொண்டு வர திட்டமிடுகிறேன். அப்படி தப்பான வருமானத்தை நியாயமான வரவாக செய்வது தான் Money Laundry என்பதாகும். கருப்பு பணத்தை சலவை செய்து வெள்ளை ஆக்குவது.

நேற்றுவரை பஞ்ச பாட்டு பாடிக்கிட்டு, பழைய கிழிந்த புடவை கட்டிக் கொண்டிருந்த மனைவி, கலர் கலராக பட்டு சேலை கட்ட, அதை பக்கத்து வீட்டுக்கார அம்மா போட்டு வாங்கி வேட்டு வெச்சிடாங்கள். ED வந்து மொத்த காசையும் அள்ளிக்கிட்டு போய்விட்டது. அப்படியெனில் பணம் மட்டுமல்ல, நானும் கைக்க்ய் எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று ஜெயிலுக்கு போக வேண்டும்.

பொதுவாக ஒரு குற்றம் செய்துவிட்டால் அதை அரசாங்கம்தான் அவர் இந்த குற்றத்தை இப்படி செய்தார் என்று ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டும். அதனால் பல நேரங்களில் அந்த விசாரணை நிரூபிக்க பட முடியாததால் தள்ளுபடி ஆகிவிடும். இப்போது இந்த கேசில் யார் வீதியில் பணத்தை தவற விட்டார்கள் என்று கண்டு பிடித்தால்தான் என்னை தண்டிக்க முடியும். அது முடியாததால் லஞ்சம் வாங்கியவர்கள் முதல், கொலைகாரர்கள் வரை எளிதாக சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து தப்பி விடுகிறார்கள்.
ஆனால் இந்த PMLA Act என்பதில் உங்களிடம் இருக்கும் பணத்திற்கு நீங்கள் சரியாக ஆதாரம் காட்ட வேண்டும், அது அரசின் வேலையல்ல. அதை செய்ய முடியாத பட்சத்தில் நீங்கள் குற்றவாளியே! முன்பெல்லாம், கெடா விருந்து வைத்து மொய் வாங்கியது போல பல வகையில் கணக்கு காட்டி அதை சமாளித்து விடுவார்கள். அல்லது அதிக பட்சம் அந்த காசு அரசுக்கு போய்விடும். ஆனால் இதில் அப்படி தப்பிக்க முடியாது, பணம் போவது மட்டுமல்ல தண்டனையும் நிச்சயம்..

இந்த சட்டம் வாஜ்பாய் அரசினால் 2002 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஆனால் பல ஷரத்துகள் முடிவு பெறாத நிலையில் வாஜ்பாய்க்கு பின் வந்த காங்கிரஸ் ஆட்சியில் 2006 ஆம் ஆண்டு நிறைவாக சட்டமாகியது. ஆனாலும் அதில் வழக்கு, வாய்தா என்று இழுத்தடிக்கும் வகையில் ஓட்டைகள் இருந்ததால் பலர் தப்பித்து கொண்டு இருந்தார்கள். காரணம், அந்த வழக்கை முழுதாக ஆராய்ந்து, ECIR (FIR போல ED செய்வது) செய்தபின், அதற்கான முகாந்திரங்கள் இருந்தால் மட்டுமே அவரை கைது செய்ய முடியும். அதனால், அந்த வழக்கை அது சம்பந்த பட்ட குற்றவாளி, வெளியே இருப்பதால், பொய் ஆதரங்களை சேர்க்கவோ அல்லது இருக்கும் ஆதாரங்களை சிதைக்கவோ செய்து அதை ஒன்றுமில்லாமல் ஆக்கி நீர்த்து போக செய்து விடுவார்கள்.

ஆனால் மோடியின் ஆட்சியில், 2019 ஆம் ஆண்டில் இந்த சட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக, குற்றவாளியிடம் தவறான சொத்துக்கள், இருந்தால் போதும், அதை வைத்து ECIR செய்யுமுன், அவரை கைது செய்து, சிறையில் அடைக்கலாம். அதுவும் அரசு தரப்பில் அந்த வழக்கின் விசாரணையை முடிக்கும் வரை, அதாவது அரசு வழக்கறிஞர் ஆட்சேபனை செய்தால், பெயில் கிடைக்காது.
அது மட்டுமல்ல, அந்த குற்றத்தை செய்தவர் அதை சரியான பணம் (Legitimate money) என்று நிரூபிக்க வேண்டும். இல்லாத போது அது தவறான பணமாகவே கருதி தண்டனை பெற்றுத்தர முடியும். அது மட்டுமல்ல, இது வரை ஒரு வழக்கு சட்டமாக இயற்றப்பட்டு, அதை ஜனாதிபதி ஒப்புதல் வழங்கிய நாளிலிருந்துதான் அமலுக்கு வரும். ஆனால் இது முன்கூட்டிய நாளில் இருந்த வழக்குகளை கூட பொறுத்த முடியும். அதாவது 2006 ஆம் ஆண்டு செய்த நேஷனல் ஹெரால்டு கேசுக்கும் இது பொருந்தும்.

ஒரு சட்டம் பாரளுமன்றத்தில் பாஸ் செய்து, அதை மேல் சபையில் நிறைவேற்ற வேண்டும். ஆனால் Money Bill என்பதற்கு பாராளுமன்ற அனுமதியே போதும் என்பதால் நேரடியாக அமுல் செய்யப்பட்டது. மேலும் எதிர்கட்சியை சேர்ந்ததவர்கள் மட்டும் பழி வாங்கப்படுவதாக சொல்லபடுகிறது. அதாவது அவர் குற்றவாளியாக இருந்தாலும் குற்றம் செய்தவர் எதிர்கட்சியாக இருப்பதால், அவரை தண்டிக்கும் முன் ஆளும் கட்சியை சேர்ந்தவரும் தண்டிக்க பட வேண்டும் என்பது அவர்கள் நியாயம். எதிர் கட்சிக்காரன் யோக்கியன் என்பதல்ல..!இந்த வழக்கின் முன் தேதியிட்ட வழக்குகள் போன்ற சில முரன்பாடுகள் இருப்பதால், இதை வழ்க்காக தொடர்ந்து, அது வருங்காலத்தில் மூவர் கொண்ட ஒரு பெஞ்சு மூலம் விசாரிக்கப்படும். அது வரை இது தொடரும் ..

ஆம், சமீபத்தில் மேற்கு வங்கத்த்தில் கைப்பற்றப்பட்ட பணம், சென்னையில் சினிமா பைனான்சியர்களிடம் சிக்கிய பணம் என்று எல்லாம் இந்த வழக்கின் கீழ் வரும் என்பதால், திருட்டு பயல்கள் எல்லாம் பம்முகிறார்கள். எனவே காசு சம்பாதிப்பது எளிது, ஆனால் அதை காப்பாற்றுவதில் பெரிய சிக்கல்கள் உள்ளது. எனவே PMLA என்பது பலருக்கு தூக்கத்தை மட்டுமல்ல எதிர் காலத்தையும் கேள்விக் குறியாக்கிவிட்டது. ED இன் வேட்டை தொடரும்..

மரு, தெய்வசிகாமணி