பிரதமர் பதவியை சம்பாதித்தார், சாதித்தார் மோடி!- பிரனாப் முகர்ஜி சர்டிபிகேட்!

பிரதமர் பதவியை சம்பாதித்தார், சாதித்தார் மோடி!- பிரனாப் முகர்ஜி சர்டிபிகேட்!

இந்தியாவில் தனிப் பெரும் சாதனைப் படைத்தாகச் சொல்லப்படும் பிரதமர் பதவி மன்மோகன் சிங்குக்கு சோனியா காந்தியால் வழங்கப்பட்டது, ஆனால் மோடி அதைச் சாதித்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரனாப் முகர்ஜி தனது புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிரனாப் முகர்ஜி ‘தி பிரசிடென்சியல் இயர்ஸ் 2012-2017‘ என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். அவர் இறப்பதற்கு முன்னர் இந்த புத்தகத்தை எழுதி முடித்து இருந்தார். இந்த புத்தகம் செவ்வாய் கிழமை வெளியிடப்பட்டது. அதில் மக்கள் தேர்ந்தெடுத்த தால் நரேந்திர மோடி பிரதமர் ஆனார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங்குக்கு பிரதமர் பதவியை வழங்கினார் என்று கூறியுள்ளார். கூட்டணி ஆட்சி மற்றும் கட்சிகள் சின்ன சின்ன லாபத்துக்காக கூட்டணி மாறியது போன்ற விசயங்களைப் பார்த்து மக்கள் வெறுப்படைந்து விட்டதாகவே நானும் நம்புகிறேன். ஒரு கட்சியையோ அல்லது ஒரு நபரையோ ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும் என்று பொது நோக்கத்தில் கூட்டணி சேர்கின்றன என்று குறிப்பிட்டு உள்ளார்.

இரண்டு காரணங்களுக்காக 2014ம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. முதலாவது, 30 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டியிடும் ஒரு கட்சி தீர்க்கமான வெற்றியை பெற்றது. இரண்டாவது காரணம், பாஜக கட்சி பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைத்தது. இருந்த போதிலும், தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டது என்று கூறியுள்ளார்.

மன்மோகன் சிங் மற்றும் நரேந்திர மோடி இருவரின் ஆட்சியின் போதும், குடியரசுத்தலைவராக இருந்தவர் பிரனாப் முகர்ஜி. அவர் இது குறித்தும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார். சோனியா காந்தியை காங்கிரசும் கூட்டணிக் கட்சிகளும் பிரதமராக அழைத்தன. ஆனால் அதை ஏற்காமல் மன்மோகன் சிங்குக்கு அந்த பதவியை வழங்கினார் என்று பிரனாப் குறிப்பிட்டு உள்ளார்.

ஆனால் மோடி, 2014ம் ஆண்டு தேர்தலில் பாஜகவை வழிநடத்தி பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமரானார். அவர் பிரதமர் பதவியை சம்பாதித்தார், சாதித்தார் என்று கூறியுள்ளார்.

Related Posts