June 7, 2023

வீடு தேடி வரும் கண் ஆபரேசன் தியேட்டர்! – சங்கரா நேத்ராலயா அசத்தல்!

இந்தியாவில் கண்புரை நோயால் அவதிப்படுபவர்கள் ஏராளம். இவர்களில் கிராமப் பகுதி, மலைப் பகுதிகளில் பலர் போதிய சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை ஐ.ஐ.டி. மருத்துவ தொழில்நுட்ப ஆராய்ச்சி துறையுடன் இணைந்து நடமாடும் கண் ஆபரேசன் தியேட்டரை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறது.

eye jy 29

இரண்டு பெரிய பஸ்கள் ஆஸ்பத்திரி போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பஸ்சுக்குள் டாக்டர்கள் அறை, நோயாளியை ஆபரேசனுக்கு தயார்படுத்தும் அறை உள்ளது. இன்னொரு பஸ்சுக்குள் அதிநவீன கருவிகளுடன் கூடிய ஆபரேசன் தியேட்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் கிராமப் பகுதிகளுக்கு செல்லும் மருத்துவ குழுவினர் கிராமங்களில் 10 நாட்கள் முகாமிடுகிறார்கள். அப்போது கண் பரிசோதனை செய்து ஆபரேசன் தேவைப்படுபவர்களுக்கு அங்கேயே ஆபரேசன் செய்து தொடர் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் 29 கிராமப்புறங்களில் முகாம் நடத்தப்பட்டு 3326 பேருக்கு ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெற்றியடைந்துள்ள இந்த திட்டம் ஜார்கண்ட் மாநிலத்தில் மலைவாழ் மக்களுக்கு செயல்படுத்தப்படுகிறது.இதற்காக ரூ. 1.76 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும் கண் சிகிச்சை வாகனம் ஜாம்ரெட்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல்- அமைச்சர் ஸ்ரீரகுபர்தாஸ் தொடங்கி வைக்கிறார்.மேற்கண்ட தகவலை சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் எஸ்.எஸ்.பத்ரி, ஐ.ஐ.டி. மருத்துவ தொழில் நுட்ப ஆராய்ச்சி பிரிவு தலைவர் மோகனசங்கர், டாக்டர் பி.எஸ்.ராஜேஷ், என்.ராகவன் ஆகியோர் தெரிவித்தனர்.