ராணுவ விமான விபத்தில் 13 பேர் பலி – இந்தோனேசியா சோகம் –

ராணுவ விமான விபத்தில் 13 பேர் பலி – இந்தோனேசியா சோகம்  –
இந்தோனேசியாவில் ஹெர்குலஸ் சி-130 ரக ராணுவ சரக்கு விமானம் திமிகா நகரில் இருந்து பப்புவா மாகாணத்துக்கு உணவு பொருட்களை எடுத்து சென்றது. விமானத்தில் மொத்தம் 13 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 12 பேர் விமான சிப்பந்திகள் மற்றும் ஒரு பயணியும் அடங்குவர். விமானம் டங்கிய மலைப் பகுதியில் பறந்து சென்று கொண்டிருந்தது. தரைஇறங்க இருந்த நிலையில் காலை 6.08 மணியளவில் விமான கட்டுப்பாட்டு அறையுடன் ஆன தொடர்பை அந்த விமானம் இழந்தது. இதனால் அதன் நிலை குறித்து அறிய அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.இதற்கிடையே, அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரியவந்தது.
yeman dec 18
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் பலியாகினர். அவர்களில் 3 பேர் விமானிகள், 8 பேர் தொழில் நுட்ப கலைஞர்கள், ஒருவர் பயணி மற்றொருவர் ராணுவ அதிகாரி ஆவர். தகவலறிந்த மீட்பு குழு வினர் அங்கு விரைந்து சென்றனர். பலியான 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. வானிலை விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. விமானம் விபத்துக்கு முன்பு மேக மூட்டத்துக்கு வெளியே பறந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதற்கு முன்பு கடந்த நவம்பரில் போர்னியோவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் 3 பேர் பலியாகினர். ஜூலையில் மத்திய ஜாவாவில், ராணுவ ஹெலிகாப்டர் ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. அதில் 3 பேர் உயிரிழந்தனர்.
error: Content is protected !!