வேர்ட்பேட்(WordPad) என்பது ஒரு அடிப்படை டெக்ஸ்ட்-எடிட்டிங் செயலியாகும். இது பயனாளர்கள் வடிவமைக்கப்பட்ட உரையுடன் ஆவணங்களை உருவாக்கவும், திருத்தவும் முடியும். இதில் பிற கோப்புகளுக்கான படங்கள் மற்றும் பிற இணைப்புகளையும் இணைக்கலாம். 1995 ஆம் ஆண்டு விண்டோஸ் 95 பதிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து, கணினிகளில் இது தானாகவே உள்பொறுத்தப்பட்டிருக்கும் செயலியாக வேர்ட்பேட் உள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்போது வேர்ட்பேட்(WordPad) பயனர்களுக்கு மாற்றாக மைக்ரோசாஃப்ட் வேர்ட்(Microsoft Word) பயன்பாட்டையும், ரிச் டெக்ஸ்ட் வடிவம் (Rich Text Format) தேவையில்லாதவர்களுக்கு நோட்பேடையும் (Notepad) பரிந்துரைக்கிறது.
இதையொட்டி வேர்ட்பேட்(WordPad)இனி புதுப்பிக்கப்படாது என்றும், விண்டோஸின் எதிர்கால புதிய பதிப்பு வெளியீட்டில் வேர்ட்பேட் நீக்கப்படும் என்றும் மைக்ரோசாப்ட் இன்று தெரிவித்துள்ளது. “நாங்கள் .doc மற்றும் .rtf போன்ற ஆவணங்களுக்கு மைக்ரோசாஃப்ட் வார்டை(Microsoft Word) பரிந்துரைக்கிறோம் மற்றும் .txt போன்ற எளிய உரை ஆவணங்களுக்கு நோட்பேடை(Notepad) பரிந்துரைக்கிறோம்” என தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக வேர்ட்பேட்(WordPad) அதிக கவனத்தைப் பெறாத காரணத்தாலும், பயனர்கள் மைக்ரோசாஃப்ட் வேர்ட் மற்றும் பிற நவீன செயலிகளை அதிகளவில் பயன்படுத்துவதாலும் வேர்ட்பேடை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நிறுத்தவுள்ளது. எப்போது வேர்ட்பேட்(WordPad) செயலி விண்டோஸ் மென்பொருளில் இருந்து நீக்கப்படும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை. அடுத்த ஆண்டு புதிய விண்டோஸ் 12 அறிமுகப்படுத்தும் போது நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைக்ரோசாஃப்ட் தற்போது Windows 11 23H2 புதுப்பிப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 21-ல் திட்டமிடப்பட்டுள்ள விண்டோஸ் 11 புதுப்பிப்பு வெளியீட்டு நிகழ்வில் புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
ரெப்போ விகிதம் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்…
பல பெண்களுக்கு, மாதவிடாய் சுழற்சியானது வலிமிகுந்த பிடிப்புகளுடன் சேர்ந்து, அன்றாட செயல்பாடுகளை மட்டும் பாதிக்காமல்,தாங்குவது மிகவும் கடினமாக இருக்கும். அத்தகைய…
மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் மு..ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை…
SRK இந்த ஆண்டில் மீண்டுமொருமுறை சாதனை நிகழ்த்தியுள்ளார்! டங்கி டிராப் 4 (டிரெய்லர்) வெளியான வேகத்தில் பெரும் சாதனை படைத்து…
அண்மையில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் மத்திய அமைச்சர்களான நரேந்திர சிங் தோமர், ப்ரஹலாத்…
ரஷ்ய அதிபராக புடின் உள்ளார். அவரது பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு அங்கு மார்ச் 17ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று…
This website uses cookies.