Exclusive

தங்கப் பந்து (Ballon d’Or)விருதை 8-ஆவது முறையாக வென்று சாதனை படைத்தார் மெஸ்ஸி

ர்வதேச ஸ்டார் ஃபுட்பால் பிளேயரான லயோனல் மெஸ்ஸி, சிறந்த வீரருக்கான தங்கப் பந்து (Ballon d’Or) விருதை 8-ஆவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.கால்பந்து விளையாட்டில், 1956ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு, பலோன் டி ‘ஓர் விருது வழங்கப்படும். அது, இந்த விளையாட்டின் உயர்ந்த விருதாகவும் கருதப்படுகிறது என்பதும் இதற்கு முன்னர் 2009, 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021-ல் Ballon d’Or விருதை வென்றுள்ளார் என்பதுடன் தற்போது இன்டர் மியாமி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் தனது முதல் உலகக்கோப்பையை வென்று மெஸ்ஸி அசத்தினார். மெஸ்ஸி, பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் என்ற அழைக்கப்படும் PSG கால்பந்து அணிக்காக விளையாடி வந்தார். அவரின் ஒப்பந்தம் இந்த ஆண்டோடு முடிவடைந்த நிலையில், அவர் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் இணைந்தார். அணியில் இணைந்ததோடு அந்த அணிக்காக முதல் கோப்பையையும் வென்றுகொடுத்து அசத்தினார். அதோடு இந்த ஆண்டுக்கான ‘பாலன் டி ஓர்’ விருதுக்கும் அவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த விருதை மெஸ்ஸி ஏற்கனவே 7 முறை வென்றநிலையில், 8-வது முறையாக வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இன்று அதிகாலை நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழா நடைபெற்ற நிலையில், விருதுப் பட்டியலில் 30 பேர் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இந்த பட்டியலில் முதல் முறையாக ரொனால்டோவில் பெயர் இடம்பெறாத நிலை ஏற்பட்டது.

இந்த விருதை வெல்ல நார்வே வீரரும், மான்செஸ்டர் சிட்டி அணிக்காக ஆடும் எர்லிங் ஹாலண்ட் என்பவருக்கும் மெஸ்ஸிக்கும் போட்டி நிலவியது. இறுதியில் அதிக வாக்குகள் பெற்று கால்பந்தில் உயரிய விருதாக கருதப்படும் ‘பாலன் டி ஓர்’ விருதை 8-வது முறையாக வென்று மெஸ்ஸி அசத்தியுள்ளார். 5 ‘பாலன் டி ஓர்’ விருதுகளோடு இந்த பட்டியலில் போர்த்துக்கல் வீரர் ரொனால்டோ இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எர்லிங் ஹாலண்ட் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக சாம்பியன்ஸ் லீக், பிரீமியர் லீக், FA கோப்பை ஆகியவற்றை வென்றுள்ளார். அதே போல பிரீமியர் லீக்கில் அதிக கோல் அடித்த வீரர், பிரீமியர் லீக் தொடர் நாயகன், UEFA சிறந்த வீரர் ஆகிய விருதுகளை வென்றுள்ளார். அதே நேரம் மெஸ்ஸி, உலகக்கோப்பை, லீக் 1 கோப்பை, லீக் 1 நாக் அவுட் கோப்பை ஆகியவற்றை வென்றதோடு, லீக் 1 தொடரில் அதிக அசிஸ்ட் செய்த வீரர், உலகக்கோப்பை தங்கக்கால்பந்து, உலகக்கோப்பை தொடர் நாயகன், உலகக்கோப்பையில் அதிக அசிஸ்ட் செய்த வீரர், FIFA சிறந்த வீரர் ஆகிய விருதுகளை வென்றுள்ளார். இதன் காரணமாக மெஸ்ஸிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

admin

Recent Posts

ரெப்போ விகிதத்தில் 5வது முறையாக மாற்றம் இல்லை: 6.5% ஆக தொடரும்!

ரெப்போ விகிதம் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்…

3 hours ago

மெஃப்டால்’ வலி நிவாரணி மாத்திரைகளால் மோசமான எதிர்விளைவுகள்!- அரசு எச்சரிக்கை

பல பெண்களுக்கு, மாதவிடாய் சுழற்சியானது வலிமிகுந்த பிடிப்புகளுடன் சேர்ந்து, அன்றாட செயல்பாடுகளை மட்டும் பாதிக்காமல்,தாங்குவது மிகவும் கடினமாக இருக்கும். அத்தகைய…

5 hours ago

புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள நிதி கோருகிறார் முதல்வர்!

மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் மு..ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை…

9 hours ago

24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகளைப் பெற்ற ஒரே இந்தித் திரைப்படம் “டங்கி” டிராப் 4 டிரெய்லர் !!

SRK இந்த ஆண்டில் மீண்டுமொருமுறை சாதனை நிகழ்த்தியுள்ளார்! டங்கி டிராப் 4 (டிரெய்லர்) வெளியான வேகத்தில் பெரும் சாதனை படைத்து…

9 hours ago

மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பு-நான்கு பேருக்கு கூடுதல் பொறுப்பு!

அண்மையில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் மத்திய அமைச்சர்களான நரேந்திர சிங் தோமர், ப்ரஹலாத்…

13 hours ago

ரஷ்ய அதிபர் தேர்தல் : மார்ச் 17ம் தேதி நடைபெறும்!

ரஷ்ய அதிபராக புடின் உள்ளார். அவரது பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு அங்கு மார்ச் 17ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று…

13 hours ago

This website uses cookies.