கலவர பூமியான மதுராவில் போலீஸ் ஆபீசர்கள் உள்பட 24 பேர் பலி

கலவர பூமியான மதுராவில் போலீஸ் ஆபீசர்கள் உள்பட 24 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தின் ஜவகர்பாத் பகுதியில் 260 ஏக்கர் நிலபரப்பு கொண்ட பூங்காவை “சத்தியா கிரஹிகள்” என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் கடந்த 2 வருடமாக ஆக்கிரமித்து கொண்டனர். இதனை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்களை வெளியேற்ற அலகாபாத் கோர்ட்டு உத்தரவிட்டது. ஐகோர்ட்டு உத்தரவு இருப்பினும் ஆக்கிரமிப்பாளர்களை வெறியேற்றுவதில் போலீசார் தோல்வியை தழுவினர். பூங்காவை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்களை நேற்று போலீசார் வெளியேற்ற முயற்சி செய்தபோது மோதல் வெடித்தது.

mathura

சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றதும் ஆக்கிரமிப்பாளர்கள் அவர்கள் மீது கற்களை வீசினர், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இதனையடுத்து பதிலடி கொடுக்கும் விதமாக போலீசார் கண்ணீர் புகைக்குண்டை வீசினர், மற்றும் தடியடி நடத்தினர். ”சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து நாட்டு துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு உள்ளது,” என்று போலீஸ் அதிகாரி சவுத்ரி கூறிஉள்ளார்.

இதனிடையே இன்று ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது.கலவரத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் சிகிச்சைப் பலனின்றி இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 24 ஆக அதிகரித்தது. பலியானவர்களில் 22 பேர் போராட்டக்காரர்கள், இருவர் போலீஸார். மதுரா சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளுமாறு மதுரா நகர பிராந்திய ஆணையருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு போலீஸ் டிஜிபி ஜவேத் அகமது, உள்துறை முதன்மைச் செயலாளர் தெபாசிஷ் பாண்டா ஆகியோர் விரைந்துள்ளனர். உத்தரப்பிரதேச டிஜிபி ஜாவேத் அகமது கூறும்போது, “மதுரா கலவரம் தொடர்பாக 124 பேரை கைது செய்துள்ளோம். முக்கிய குற்றவாளி ராமிருக்‌ஷ் யாதவை தேடி வருகிறோம். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவுள்ளோம்” என்றார்.

நடந்த சம்பவம் குறித்து போலீஸ் (சட்டம் – ஒழுங்கு) ஐ.ஜி. ஹெச்.ஆர்.சர்மா கூறும்போது, “மதுரா நகரின் ஜவஹர் பாக் பகுதியில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்து. அதனையடுத்து சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அங்கிருந்த 3000-க்கும் மேற்பட்டவர்கள் போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் ஆசாத் பாரத் விதிக் விசாரிக் கிராந்தி சத்யாகிரஹி (Azad Bharat Vidhik Vaicharik Kranti Satyagrahi) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிறிது நேரத்தில் போலீஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

முதலில் போலீஸார் தடுப்புகளாலும், கண்ணீர் புகை குண்டுகளாலும் கலவரக்காரர்களைத் தடுக்க முயன்றனர். ஆனால், கலவரம் கட்டுக்கடங்காமல் சென்றதால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மதுரா நகர எஸ்.பி. முகுல் துவிவேதி, ஃபரா காவல் நிலைய அதிகாரி சந்தோஷ்குமார் ஆகியோர் என அடையாளம் தெரியவந்துள்ளது. 20-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்துள்ளனர்” என்றார்.

Related Posts

error: Content is protected !!