புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொள்ளும் ‘மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி’ !

புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொள்ளும் ‘மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி’  !

நிஜமாகவே, விஜய் டிவியின் ப்ரோக்ராம்களின் இரசிகன் நான். விஜய் டிவியின் பல ஒரிஜினல் கான்செப்ட்கள் மற்ற சேனல்களால் திருடப்பட்டு விளங்காமல் போனவைகள். சூப்பர் சிங்கர் கலக்கப் போவது யாரு சீரியல் குடும்ப நிகழ்வுகள் இரண்டு சீரியல்களின் கதை மாந்தர்களை இணைக்கும் எபிசோட்கள் பிக்பாஸ் நீயா நானா இப்படி பலதையும் சொல்லிக் கொண்டே போகலாம்….இவை அனைத்திற்கும் ஏகோபித்த வரவேற்பு மக்களிடத்தில் உள்ளது. இந்தத் தொடர்களை காப்பி அடிப்பது என்பது மற்ற சேனல்களுக்கு தொக்கு மாதிரி. ஆனால் ஒன்று கூட சோபிக்கவில்லை. காரணம் காப்பி. ஒரிஜினல் ஒரிஜினல்தான்…!

வரிகள் இருந்தால் கழுதைப் புலி, புலியாகி விடுமா?  விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவதைக் கண்ட வேறொரு சேனல், தனக்கு சூடு போட்டுக் கொண்டு புலி என்று உலவுகிறது. விஜய் டிவியின் லேட்டஸ்டாக வெளியான ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்வு. அதில் சமையல் சுவையும் இருந்தது, நல்ல நகைச்சுவையும் இருந்தது. காரணம் அதை ஆங்கர் செய்த செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட். இருவரும் கைப் பக்குவமும் நாவில் நகைச்சுவைப் பக்குவமும் இருந்தன.

அந்த நிகழ்ச்சிக்கு தமிழகமே அடிமையானது. அதைப் பார்க்காதவர்கள் பாவம் செய்தவர்களாகக் கருதப் பட்டனர். அதில் கலந்து கொண்டவர்கள் நம்மைப் போன்றவர்கள். விசேஷமாக உருவாக்கப் பட்டு லைம் லைட் அடிக்கப் பட்டவர்கள் அல்ல. சொல்லப் போனால் அதில் வந்த புகழ், அதன் காலக் கட்டத்திலேயே புகழின் உச்சிக்குப் போனார். சேலத்தில் அவரைக் காண வந்த கூட்டத்தைக் கட்டுப் படுத்த முடியாம் போலிஸ் திணறியது. புகழ் எங்கு சென்றாலும் இதே நிலைமை.

இப்படி இருக்க, காப்பி பூனைப் புலிகளும் ஒரு சமையல் நிகழ்ச்சியைத் தயாரித்து ஒளிபரப்பி வருகின்றனர். மருந்துக்குக் கூட நகைச்சுவை இல்லை. அம்புட்டு பேரும் மேட்டுக்குடி 5 ஸ்டார் ரேஞ்சில் பேசுகிறார்கள். டிஆர்பி ரேட்டிங் அள்ளும் என்று நினைத்து சூடு போட்டுக் கொண்டதில், அந்த நேரத்தில் மக்கள் விஜய் டிவியின் நிகழ்ச்சிக்கு மக்கள் தாவி விட்டார்கள். காப்பி நிகழ்ச்சி என்றுமே விலை போகாது. இப்படித்தான் ‘கோன் பனேகா க்ரோர்பதி’யை உல்ட்டா பண்ணி தங்கள் இமேஜை நொறுக்கிக் கொண்டார்கள்.

விஜய் டிவியில் இருந்த ஜனரஞ்சகம், காப்பியில் ஒரு துளியும் இல்லை. தன் ரேட்டிங்கில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார்கள் காப்பி பூனைகள். கடந்த 12 வருடங்களாக, மற்றொரு ம க பா ஆனந்தையோ, பிரியங்கா தேஷ்பாண்டேவையோ, டிடியையோ, கோபியையோ இவர்களால் எத்தனை பணம் கொடுத்தும் உருவாக்க முடியவில்லை.

காரணம், விஜய் டிவிக்காக இவர்கள் உயிரைத் தரத் தயாராக இருக்கிறார்கள். பணம் அவர்களை மாற்ற முடியாது. ஏழைக் கலைஞர்களை விலைக்கு வாங்கலாம். ஆனால் அறிவார்ந்த கூட்டத்தை விலைக்கு வாங்க முடியாது.

மாஸ்டர் செஃப்… ஒரு ஏமாற்ற செஃப். இதை இந்த அளவுதான் இந்த ப்ரோக்ராம் பற்றி நாகரிகத்தோடு சொல்ல முடியும்.

Related Posts

error: Content is protected !!