சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் கேண்டீனில் மசால் தோசை ஆஹா.. ஓஹோ.. பேஷ்.. பேஷ்!

சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் கேண்டீனில்  மசால் தோசை ஆஹா.. ஓஹோ.. பேஷ்.. பேஷ்!

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே சார்பில் ‘ஜன் ஆஹார்’ எனும் உணவகம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு இட்லி (2) ரூ.12–க்கும், பொங்கல் ரூ.15–க்கும், ரவா உப்புமா ரூ.15–க்கும், வடை (2) ரூ.16–க்கும், உருளைக்கிழங்கு போண்டா (2) ரூ.12–க்கும், ரவா கேசரி ரூ.9–க்கும், வெஜ் கட்லெட் (2) ரூ.25–க்கும், வெஜ் பிரியாணி ரூ.43–க்கும், தயிர்சாதம் ரூ.17–க்கும், சாம்பார் சாதம் ரூ.19–க்கும், புளிசாதம் ரூ.20–க்கும், லெமன் சாதம் ரூ.18–க்கும், தேங்காய் சாதம் ரூ.16–க்கும், தயிர்வடை ரூ.14–க்கும், காபி ரூ.10–க்கும், டீ ரூ.5–க்கும், சப்பாத்தி ரூ.28–க்கும், தக்காளி சூப் ரூ.15–க்கும், ரெயில் நீர் பாட்டில் ரூ.15–க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

rail aug 25

பயணிகளை கவரும் வகையில் கடந்த 22–ந்தேதி மசாலா தோசை கவுண்ட்டர் திறக்கப்பட்டது. ரூ.15–க்கு சுடச்சுட வழங்கப்படும் மசாலா தோசை பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது. காலை 6.30 மணி முதல் 10 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் மசாலா தோசை விற்பனை செய்யப்படுகிறது.இதனை பயணிகள் ஆர்வமாக வாங்கி சாப்பிடுகிறார்கள். இதனால் மசாலா தோசை விற்பனை விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இப்போது மசாலா தோசைக்கு சாம்பார் மட்டும் வழங்கப்படுகிறது. விரைவில் சட்னியும் வழங்கப்படும் என தெரிவித்தனர். மசாலா தோசைக்கு கிடைத்த வரவேற்பையொட்டி, மேலும் புதிய சிற்றுண்டிகளாக பூரி–சென்னா மசாலா, பிரெட் ஆம்லெட் போன்ற உணவு வகைகளும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளனர்.

இதுகுறித்து ‘ஜன் ஆஹார்’ கேட்டரிங் ஆய்வாளர் எம்.வேல்முருகன் கூறுகையில், ‘‘இங்கு பயணிகளுக்கு தரமாகவும், சுவையாகவும் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ரூ.15–க்கு வழங்கப்படும் மசாலா தோசைக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 3 நாட்களில் 1,500–க்கும் அதிகமான மசாலா தோசைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. தேவைக்கு ஏற்ப தோசை சுடுவதால், பயணிகளுக்கு சுடச்சுட தோசை கிடைக்கிறது’’ என்றார்.

‘‘ரூ.15–க்கு மசாலா தோசை வழங்குவது வரவேற்கத்தக்கது. இது மலிவானதாகவும், சுவையானதாகவும், சுகாதாரமானதாகவும் உள்ளது’’ என்று பயணிகள் தெரிவித்தனர். எழும்பூர், வடக்கு கடற்கரைசாலை, திநகர், மவுண்ட், தாம்பரம் போன்ற ரயில் நிலையங்களில் அமைக்கனும்னு இதுக்காக தொடங்கப்பட்டுள்ள தொலைபேசி மைய எண்ணை (044-25354405) தொடர்பு கொண்டு பலரும் சொல்கிறார்களாம்.

ரயில் பயணம் பண்றவங்க மட்டுமில்லாம பிளாட்பாஃர்ம் டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போய் சாப்ட்டு வந்தாகூட கணிசமான பணம் மிச்சமாகும் என்று கணக்குப் போட்டி வரும் ஜனக்களும் உண்டு . ஆனாலும் அங்க ஹோட்டல் நடத்திகிட்டு அதிக விலைக்கு விக்கற ஏ2பி, சரவண பவன் இவங்கெல்லாம் கூட்டா சேர்ந்து இதுக்கு மூடுவிழா பண்ணாம இருந்தா சரி என்ற குரலும் ஒலிக்கிறது…

error: Content is protected !!