Exclusive

தங்கலான் படத்தில் பழங்குடிப்பெண்ணாக கலக்கும் மாளவிகா மோகனன்

ந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை மாளவிகா மோகனன் ஒரே விதமான கதாபாத்திரங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், பலவிதமான பாத்திரங்களை ஏற்று, சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். கவர்ச்சியான அவதாரங்களில் நடித்தாலும், உடனே அழுத்தமான பாத்திரத்திற்கு மாறும் அவரது திறன் ஒரு நடிகையாக அவரது பன்முகத்தன்மையை நிரூபிக்கிறது. பல்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளில் தன் திறமையை நிரூபிக்க, அவர் எப்போதும் தயாராக இருக்கிறார்.

சீயான் விக்ரமுடன் அவர் நடித்துள்ள “தங்கலான்” திரைப்படத்தில், ஒரு பழங்குடிப் பெண்ணாகவே மாறியிருப்பது அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. அவர் இப்படி மாறுவது இது முதல் முறையல்ல; உலகப் புகழ்பெற்ற இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய அவரது முதல் படமான “பியாண்ட் தி க்ளவுட்ஸ்”, படத்திலேயே மிக கனமான கதாபாத்திரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இது அவரது நடிப்புத் திறமைக்குச் சான்றாகும்.

தமிழின் மிக முக்கியமான புகழ்மிகு இயக்குநரான பா ரஞ்சித்துடன் இணைந்து பணிபுரிவது, சந்தேகத்திற்கு இடமின்றி அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். பா ரஞ்சித் உடனான கூட்டணியில், அவரை வித்தியாசமான பாத்திரத்தில் பார்ப்பது ரசிகர்களுக்குச் சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும். “தங்கலான்” படத்தில் தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது அவரது பன்முக திறமைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும்.

திரைப்படத் துறையில் பல்வேறு பாத்திரங்களில் அசத்தி வரும், மாளவிகா மோகனனின் திறமை அவரது ரசிகர்கள் பாராட்டக்கூடிய ஒன்றாகவுள்ளது, மேலும் இது அவரது வரவிருக்கும் திரைப்படங்களுக்குப் பார்வையாளர்களை ஆவலுடன் காத்திருக்க வைக்கிறது.

admin

Recent Posts

ரெப்போ விகிதத்தில் 5வது முறையாக மாற்றம் இல்லை: 6.5% ஆக தொடரும்!

ரெப்போ விகிதம் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்…

1 hour ago

மெஃப்டால்’ வலி நிவாரணி மாத்திரைகளால் மோசமான எதிர்விளைவுகள்!- அரசு எச்சரிக்கை

பல பெண்களுக்கு, மாதவிடாய் சுழற்சியானது வலிமிகுந்த பிடிப்புகளுடன் சேர்ந்து, அன்றாட செயல்பாடுகளை மட்டும் பாதிக்காமல்,தாங்குவது மிகவும் கடினமாக இருக்கும். அத்தகைய…

3 hours ago

புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள நிதி கோருகிறார் முதல்வர்!

மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் மு..ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை…

7 hours ago

24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகளைப் பெற்ற ஒரே இந்தித் திரைப்படம் “டங்கி” டிராப் 4 டிரெய்லர் !!

SRK இந்த ஆண்டில் மீண்டுமொருமுறை சாதனை நிகழ்த்தியுள்ளார்! டங்கி டிராப் 4 (டிரெய்லர்) வெளியான வேகத்தில் பெரும் சாதனை படைத்து…

8 hours ago

மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பு-நான்கு பேருக்கு கூடுதல் பொறுப்பு!

அண்மையில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் மத்திய அமைச்சர்களான நரேந்திர சிங் தோமர், ப்ரஹலாத்…

11 hours ago

ரஷ்ய அதிபர் தேர்தல் : மார்ச் 17ம் தேதி நடைபெறும்!

ரஷ்ய அதிபராக புடின் உள்ளார். அவரது பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு அங்கு மார்ச் 17ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று…

12 hours ago

This website uses cookies.