மாடுகளுக்குப் பதில் மகள்களை ஏரில் பூட்டி விவசாயம் – ம. பி. ஷாக்!

மாடுகளுக்குப் பதில் மகள்களை ஏரில் பூட்டி விவசாயம் – ம. பி. ஷாக்!

 நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள து. பருவ மழை பொய்த்து போவதாலும், விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால், நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இருப்பினும் பல்வேறு இன்னல்களையும் தாண்டி லட்சகணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் வறட்சியால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச விவசாயிகள், பயிர்களுக்கு நியாய விலை கேட்டு நடத்திய போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எட்டு விவசாயிகள் கொல்லப்பட்ட னர்.இதற்கு பல காரணங்கள் கூறினாலும், இந்த சம்பவமானது நாட்டின் முதுகெலும்புகள் என்று சொல்லப்பட்ட வர்கள் மீதும், சோறளிப்பவர்கள் மீதும் திணிக்கப்பட்ட வன்முறையாகவே பார்க்கப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க, வறட்சியும் விவசாயக் கடனும் இன்று தேசியப் பிரச்னை ஆகி உள்ளது. உண்மையில் இதற்கான தீர்வு யார் பக்கம் இருக்க முடியும் என்ற கேள்விக்கு இதுவரை தீர்வு என்பது தேடலாக உள்ளது. இதனிடையே, நாட்டின் முதுகெலும்பா ன விவசாயத்தை காக்க கஷ்டத்தின் காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பசந்த்பூர் பங்ரி பகுதியில் மாடுகளுக்கு பதில் தனது இரு மகள்களை வயல்களில் விவசாய பணியில் ஈடுபடுத்தி வரும் செய்தி வெளியாகி பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச விவசாயி ஒருவர். தொடர் பொருளாதார நெருக்கடி காரணமாகவே இந்த மத்திய பிரதேச விவசாயிக ஒருவர் தங்களது சிறுவயது மகள்களை வைத்து உழவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து விவசாயி சர்தார் பரேலா கூறுகையில், “மாடுகள் வாங்க போதிய பண வசதி இல்லை. மக்காச்சோளம் பயிரிடுவதற்கு உழவு செய்ய வேண்டியுள்ளது. எனது மகள்கள் எட்டாவது வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டனர்” என்றார்.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆஷிஷ் சர்மா, ’சிறுவர்கள் இது போன்ற உழவு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ள தாகவும், எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளதாகவும்’ தெரிவித்தார்..

error: Content is protected !!