தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்!- வீடியோ!
தமிழ்நாட்டில் அமைதியான முறையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சி 159 இடங்களில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, வரும் 7ம் தேதி முக ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க திட்டமிட்டுள்ள நிலையில், இன்று காலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து, முறைப்படி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
திமுக தலைவ்முக ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 133 எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர். அப்போது, சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக முக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, இன்று 133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க முக ஸ்டாலின் உரிமை கோரியுள்ளார். இந்த சந்திப்பின் போது சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தை ஆளுநரிடம் வழங்கினார். மு.க.ஸ்டாலினுடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் ஆளுநர் மளிகை சென்றிருந்தனர்.
இந்த நிலையில், திமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்தடுக்கப்பட்ட தீர்மானத்தை ஆளுநரிடம் முக ஸ்டாலின் வழங்கினார் என்றும் பதவி ஏற்புக்கான அழைப்பை இன்று மாலை அறிவிப்பதாக ஆளுநர் கூறினார் எனவும் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.