முழு சந்திர கிரகணம் – சூப்பர் ஃப்ளவர் பிளட் மூன் ​​பார்ப்பது எப்படி?

முழு சந்திர கிரகணம் – சூப்பர் ஃப்ளவர் பிளட் மூன் ​​பார்ப்பது எப்படி?

ந்த ஆண்டின் சந்திர கிரகணம் எனும் முதல் நிலவு மறைப்பு, முழு நிலவு நாளான இன்று நிகழ இருக்கிறது. அதிலும் இரண்டு ஆண்டுகள் கழித்து ஏற்படும் முழு சந்திர கிரகணமாகும். இந்த சந்திர கிரகணத்தின் போது, சூரிய ஒளி புவியின் வளி மண்டலத்தின் வழியாக பயணித்து, நிலவை சென்றடைகிறது. எனவே நிலவு இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் மின்னுவதால், “இரத்த நிலவு” என்று அழைக்கப்படுகிறது. சூரிய அஸ்தமனத்தை ஒத்த பூமியின் வளிமண்டலத்தில் இருந்து வெளிச்சம் சிதறடிக்கப்படுவதால் தூசுகளும் மேகங்களும் ஒன்றாக சூழ்வதால், சந்திரன் அதிக அளவில் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனால் தான் சூப்பர் ப்ளட் மூன் (Super Blood Moon) என்றும் அழைப்படுகிறது.

சந்திர கிரகணம் என்பது, சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். அப்போது பூமியின் நிழல் நிலவின் மீது விழும். இன்று நிகழ இருக்கும் சந்திர கிரகணத்தை இந்தியாவில் பிற்பகல் 3.15 மணியில் இருந்து மாலை 6.22 மணி வரை வானில் காண முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது நீண்ட நிலவு மறைப்பாக அமையும் என்று தெரிகிறது.சந்திர கிரகணம் மாலை 3.15 மணிக்குத் தொடங்கி 6.23 மணிக்கு முடியும். அதேநேரம் முழு சூரிய கிரகணம் மாலை 4.39 மணிக்குத் தொடங்கும். அதை தென்அமெரிக்கா, வடஅமெரிக்கா, ஆசியாவின் சில நாடுகள், ஆஸ்திரேலியா, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காணமுடியும்.

அதாவது சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த அரிய நிகழ்வின் போது பூமியின் நிழலால் நிலவு மூடப்பட்டிருக்கும். பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் அளவை பொறுத்து சந்திர கிரகணங்களின் வகைகள் வேறுபடுகின்றனர்.

சந்திர கிரகணங்களில் மூன்று வகைகள் உள்ளன
1. பெனும்பிரல் கிரகணம்,
2. பகுதி சந்திர கிரகணம்
3. மொத்த சந்திர கிரகணம்.

இந்தியாவில் கொல்கத்தாவில் மாலை 6.15 முதல் 6.22 வரை மட்டுமே இந்த சந்திர கிரகணத்தை காணலாம். சென்னை, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் முழு சந்திர கிரகணம் தெரியாது, பகுதியளவு மட்டுமே காண முடியும் . அதே நேரத்தில், ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, வட ஆப்ரிக்கா நாடுகள் , மேற்கு ஆப்ரிக்க நாடுகள், தென் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் முழு சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியும்.

சந்திர கிரகணத்திற்குப் பின்னர், நிலவு ரத்த சிவப்பு நிறத்தில் இருக்கும். பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் போது, வளிமண்டல ஒளிச்சிதறல் ஏற்படும். இதன் காரணமாகவே ரத்தச் சிவப்பாக மாறுகிறது. இதனை ஆங்கிலத்தில் ‘Blood Moon’ என்று கூறுகின்றனர். அதாவது அதன் சுற்றுப்பாதை பாதையின் ஒரு பகுதியாக இது பூமிக்கு மிக அருகில் இருக்கும். இந்த நிகழ்வு “சூப்பர் மூன்” என்றும் அழைக்கப்படுகிறது. வானியலாளர்களின் கூற்றுப்படி, சந்திரன் இயல்பை விட 7 சதவீதம் பெரியதாகவும், 15 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மே மாதத்தின் முழு நிலவு வசந்த காலத்தில் ஏற்படுவதால் “ஃப்ளவர் சந்திரன்” (Flower Moon) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விஷயங்கள் அனைத்தும் ஒன்றாக நிகழும்போது, இந்த நிகழ்வை “சூப்பர் ஃப்ளவர் பிளட் மூன்” (Super Flower Blood Moo) என்று அழைக்கப்படுகிறது.

இதனை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றாலும் தமிழகத்தில் முழு சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.