’லாக்கர்’ -விமர்சனம்!

’லாக்கர்’ -விமர்சனம்!

ஹைடெக்கான மெத்தடில் பிறரின் பணத்தை கொள்ளையடிப்பது, தங்கம் கடத்துவது, ஷேர் மார்க்கெட்மூலம் மக்களை மூளை சலவை செய்து பணம் பறிப்பது போன்ற சட்ட விரோத செயல்களை செய்யும் ஒரு ஜோடி ரகசிய பங்களா ஒன்றில் பதுக்கி வைத்திருக்கும் 60 கோடி மதிப்புள்ள தங்கத்தை எதிர் வீட்டில்.தங்கி இருந்து தரையில் சுரங்க பாதை அமைத்து கொள்ளையடிக்கிறார்கள்.. இது ஏற்கனவே ஹாலிவுட் படங்களில் வந்த அர்த்த பழைய ஐடியா. சுரங்கம் தோண்டுவது அவ்வளவு எளிதா பள்ளத்திலிருந்து எடுத்த மண் எப்படி வெளியே கொட்டப்படுகிறது என்ற செய்முறைக்கு விளக்கம் எதுவுமில்லாமல் கொள்ளை சம்பவத்தை ரொம்ப வே சாதாரணமாக படமாக்கி இருப்பதெல்லாம் நகைப்புள்ளாக்கினாலும் சின்ன முதலீட்டில் ஒரு படத்தை பிரமாண்ட திரைப்படமாக காட்டுவதற்கு அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

கதை என்னவென்றால் தன் ஃப்ரண்ட்ஸூகளுடன் சேர்ந்து ஹாபியாக திருட்டு மற்றும் மோசடி வேலைகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கும் நாயகன் விக்னேஷ் சண்முகம், நாயகி நிரஞ்சனி அசோகனை கண்டதும் லவ்வில் விழுந்து விடுகிறார். விக்னேஷின் காதலை ஏற்றுக்கொள்ளும் நிரஞ்சனி, அவரை பற்றிய திருசன் என்ற உண்மை தெரிந்ததும் அவரை பிரிந்து விடுகிறார். அதில் அப்செட் ஆகி லவ்வுக்காக திருட்டு மற்றும் மோசடி வேலைகளை விக்னேஷ் கைவிட, அவருடன் நிரஞ்சனி மீண்டும் இணைகிறார். இதற்கிடையே காதலிக்காக கைவிட்ட திருட்டு வேலையை அவருக்காகவே மீண்டும் செய்ய வேண்டிய சூழ்நிலை விக்னேஷுக்கு ஏற்பட, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சொல்வது தான் ‘லாக்கர்’.

நாயகனாக நடித்தி ருக்கும் விக்னேஷ் சண்முகம் ஏற்கெனவே சில பல படங்களில் தலைகாட்டி இருப்பதால் பயம்/ தயக்கம் எதுவும் இல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார். ஆனாலும் கதைடின் பல புரிந்து பயணிக்க சின்ன சின்ன கூடுதல் எஃபோர்ட் கொடுத்திருந்திருக்கலாம். நிரஞ்சனி அசோகன் ஒரு அறிமுக நாயகி என்று சொல்ல முடியாத அளவுக்கு நல்ல நடிப்பை தந்துள்ளார். வேறு வழி இல்லாமல் காதலுக்கு துரோகம் செய்யும் போது, உணர்வு பூர்வமாக தவிக்கும் மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார்.வில்லனாக நடித்திருக்கும் நிவாஸின் வில்லத்தனம் மிரட்டலாக இருப்பதோடு, திரைக்கதைக்கும் பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது. மற்றொரு வில்லனாக போலீஸ் வேடத்தில் நடித்திருப்பவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் தாஜ்பாபு மற்றும் பிரகாஷ் இருவரும் எளிமையான உடல் மொழி மற்றும் வசனங்கள் மூலமாக சிரிக்க வைக்க முயல்கிறார்கள். .

வைகுந்த் ஶ்ரீநிவாசன்.இசை ஆவ்ரேஜ் ராஜசேகர் யுவராஜ் கண்ணன் இயக்குனர்கள் முதல்.முயற்சி சோடையில்லை. இருப்பதை கொண்டு தங்களால் முடிந்ததை எடுத்திருக் கிறார்கள். அதிலும் இரண்டாவது பாதி சஸ்பென்ஸ் திரில்லரை போல. தேவையற்ற காட்சிகள், வசனம் இல்லாமல் லாக்கர் என்ற விஷயத்தை நோக்கியே கதை சென்று கிளைமாக்ஸ் ட்விஸ்ட் கைகொடுப்பதாலேயே தேறிவிடுகிறது லாக்கர்

மார்க் 2.5/5 .

error: Content is protected !!