அகில இந்திய சாமியார்கள் அமைப்பு வெளியிட்ட போலிச் சாமியார்கள் பட்டியல்!

அகில இந்திய சாமியார்கள் அமைப்பு, போலி சாமியார்கள் 13 பேரின் பெயர்களை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரது பெயர் கூட இடம் பெறவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது.
அகில பாரதிய அகாரா பரிஷத் என்பது 13 துறவியர் சங்கங்களின் கூட்டமைப்பாகும். அகில இந்திய அளவில் சாமியார்களுக்காக உள்ள சங்கம். சமீப காலமாக பல்வேறு சாமியார்கள் சர்ச்சையில் சிக்குகின்றனர். பெரும்பாலும் செக்ஸ் சரச்சையில்தான் சாமியார்கள் சிக்குகிறார்கள். ஆசாராம் பாபு, ராம் ரஹீம் ஆகியோர் இதில் முக்கியமாக அடிபட்டவர்கள். இந்த நிலையில் சங்கத்திலிருந்து போலி சாமியார்கள் 13 பேரின் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளனர்.
இந்த 13 பேரில் பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய ஆசாராம் பாபு, ராம் ரஹீம் குர்மீத் சிங் ஆகியோர் முக்கியமானவர்கள். சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெண் சாமியார் ராதே மா அதேபோல பெண் சாமியார் ராதே மாவும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
இவரும் ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கியவர். தனது சீடரை செக்ஸுக்கு அழைத்ததாகவும் சமீபத்தில் ஒரு சர்ச்சை வெடித்தது நினைவிருக்கலாம்.. பட்டியலில் இடம்பெற்றுள்ள 13 போலிச் சாமியார்கள்: ஆசாராம் பாபு, சுக்பீந்தர் கெளர் (ராதே மா), சச்சிதானந்த் கிரி, ராம் ரஹீம் குர்மீத் சிங், ஓம் பாபா, நிர்மல் பாபா, இச்சாதாரி பீமானந்த், சுவாமி அசிமானந்த், ஓம் நமஹ சிவாய் பாபா, நாராயண் சாய், ராம்பால், ஆச்சார்யா குஷ்முனி, பிரகஸ்பதி கிரி, மல்க்கான் சிங். தமிழகத்திலிருந்து யாரும் இதில் இடம் பெறவில்லை.
பட்டியலை வெளியிட்டு அமைப்பின் தலைவரான சுவாமி நரேந்திர கிரி கூறுகையில், மத பாரம்பரியத்திற்கு உட்படாத, சர்ச்சைக்கிடமான வகையில் செயல்படும் சாமியார்களிடம் மக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். இவர்களால் பிற சாதுக்களுக்கும், முனிவர்களுக்கும் பெரும் அவமரியாதை ஏற்படுகிறது என்று கூறினார்.