வீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி!

வீடு தேடி வரத் தொடங்கிய மதுபானம் : மும்பை அதிரடி!

ப்போதைய வாழும் கொரோனா சூழ் உலகு பலருக்கும் மனஅழுத்தம் நிறைந்ததாக மாறியிருக்கிறது. பொருளாதாரச் சிக்கல், குழப்பமான அரசியல், சமூக ஏற்றத்தாழ்வுகள், பணிச்சுமை, சொந்த சோகங்கள் போன்றவையும் அதிகரித்திருக்கின்றன. எனவே, அவற்றை எதிர்கொள்ள மதுப்பழக்கம் நல்லது என்றும், அது ஆசுவாசப்படுத்தும் என்றும் தவறாகக் கற்பிக்கப்பட்டு இளைஞர்கள் முதல் நடுத்தர வயதினர் வரை பலரும் குடிப் பழக்கத்தில் அடிமையாகிக் கிடக்கின்றனர். அந்த வகையில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் இளைஞர்கள் சிலர் தன்னுடைய கழுத்துப்பட்டையைக்கூட கழற்றாமல் மதுக்கூடங்களில் மது அருந்துவதைச் மும்பை தொடங்கி சென்னை போன்ற பல நகரங்களில் பார்க்கமுடிகிறது. இப்படியான காலக் கட்டத்தில் ஆன் லைனில் ஆர்டர் செய்வோருக்கு தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வீட்டிற்கே சென்று மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படுவது மற்றும் அதற்கான விதிமுறைகள் குறித்து  மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளன.

கொரோனாவால் மிகவும் பாதிப்படைந்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதன்மையாக உள்ளது. திங்களன்று மட்டும் அம்மாநிலத்தில் 51,751 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். பாதிப்படைந்த 258 பேர் உயிரிழந்துள்ளனர். இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. மேலும் வார இறுதி நாள்களில் முழுமையான ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான முக்கிய முடிவுகள் ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு எடுக்கப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில், அங்குள்ள மதுக்கடைகளில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.எனவே கடைகளில் கூட்டம் கூடுவதை தடுக்க மதுக்கடை உரிமையாளர்களுக்கும் புதிய விதிமுறைகளை மும்பை மாநகராட்சியானது அறிவித்துள்ளது. அதன்படி,மதுக்கடை நடத்த லைசென்ஸ் பெற்றவர்கள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை, தனது உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே மதுபானங்களை விற்க அனுமதிக்கப்படுவார்கள்,என்று அறிவித்துள்ளது.

இதன் காரணமாக,எந்தவொரு வாடிக்கையாளரும் மதுபானம் வாங்க மது கடைக்கு செல்ல அனுமதி இல்லை, அதற்கு பதிலாக மதுபானங்களை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வழங்க டெலிவரி ஆட்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும்.டெலிவரி வேலை செய்யும் நபர்கள் முகக்கவசம் அணிவது மற்றும் கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வது உள்ளிட்ட அனைத்து கொரோனா வைரஸ் கட்டுப்பாடு தொடர்பான விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும், என்றும் பிரஹன் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

error: Content is protected !!