தந்தை நினைவு நாள் – நாட்டு மக்கள் 11 நாட்கள் நோ ஹேப்பி – வடகொரியா அதிபர் உத்தரவு!

தந்தை நினைவு நாள் – நாட்டு மக்கள் 11 நாட்கள் நோ ஹேப்பி – வடகொரியா அதிபர் உத்தரவு!

ட கொரியா நாட்டு அரசு. அதிபர் கிம் ஜாங் உன்-இன் தந்தை கிம் ஜாங் இல்-இன் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நாட்டு மக்கள் 11 நாட்களுக்கு சிரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கிம் ஜாங் இல் 1994 முதல் டிசம்பர் 17 , 2011, தனது மரணம் வரை வடகொரியாவின் அதிபராக இருந்தார். தற்போதைய வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல் என்பது குறிப்பிடத்தக்கது

வடகொரியாவில் மக்களுக்கு தடை என்ற சொல்லுக்கு மட்டும் தடையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு கட்டுப்பாடுகள் அதிகம். முன்னதாக, தென் கொரியாவை சேர்ந்த K-pop இசைக் குழுவின் வீடியோக்களைப் பார்த்தது மற்றும் அது தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து கொண்டதற்காகவும் குறைந்தது 7 பேரை வட கொரியா பொது இடங்களில் பகிரங்கமாக தூக்கிலிட்டுள்ளது என்ற செய்தி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்தத் தகவலை மனித உரிமை அமைப்ப்பு ஒன்று வெளியிட்டது. தற்போது நாட்டின் முன்னாள் அதிபரின் நினைவு நாளை முன்னிட்டு அந்நாடு மக்கள் 10 நாட்களுகு சிரிக்கக்கூடாது என்பதோடு வேறு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி வட கொரிய நாட்டு மக்கள் மது அருந்த, மளிகை சாமான்கள் வாங்க, ஷாப்பிங் செல்ல, பொழுதுபோக்கு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடவும் அரசு தடை விதித்துள்ளதாம். இதனை அந்த நாட்டின் எல்லை நகரமான சினுய்ஜூவில் வசிக்கும் ஒருவர் ‘ரேடியோ ஃப்ரீ ஏசியா’விடம் தெரிவித்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

அரசின் இந்த தடையை மீறுபவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்க மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இது மாதிரியான தடைகள் அமலில் இருந்தபோது அதனை மீறியவர்கள் மீது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அப்படி கைது செய்யப்பட்டவர்களின் நிலை என்ன என்பது கூட யாருக்கும் தெரியாதாம்.

கிம் ஜாங் இல்-இன் நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளாதம் வடகொரிய அரசு.

Related Posts

error: Content is protected !!