லாஸ்ட் 6 ஹவர்ஸ்- விமர்சனம்!

பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் பரத் . அதன் பிறகு விஷாலுடன் இணைந்து செல்லமே படத்தில் நடித்து இருந்தார் .பின்னர் பால்ஜி சக்திவேல் டைரக்ஷனில் காதல் என்கிற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்து இருந்தார். அந்த காதல் படத்தை தொடர்ந்து எம் மகன் ,பட்டியல் , கூடல் நகர் , என்று அடுத்து அடுத்து படங்களில் நடித்து கொண்டு இருந்தார் . ஆனால் கடந்த சில வருடங்களாக அவரது படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை . இதனால் அவருக்கு பட வாய்ப்பு குறைந்தது . அதன் பிறகு ஸ்பைடர் , குரூப் போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினர் . இந்நிலையில் பக்க க்ரைம் த்ரில்லர் படமொன்றில் நடித்து அசத்தி இருக்கிறார்.
லாஸ்ட் சிக்ஸ் ஹவர்ஸ் என்ற டைட்டில் கொண்ட அந்த படத்தின் கதை என்னவென்று கேட்டால் நேவியில் ஒர்க் செய்த ஷான் (பரத்) பார்வையிழந்தவர். மலைப் பகுதியில் தனிமையான சூழலில் அமைந்துள்ள பங்களா வீட்டில் தனியாக வசிக்கிறார். அவரது வீட்டில் கறுப்பு பணம் இருப்பதாக எண்ணி, அதை கொள்ளையடிக்க 4 பேர் கொண்ட கும்பல் திட்டமிடுகிறது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உண்டு. நள்ளிரவில் ஷானின் பங்களாவுக்குள் நுழையும் அவர்களுக்கு, அதிகாலை பால்காரர் வருவதற்குள் கைவரிசை காட்டிவிட்டு தப்பிச் செல்ல 6 மணிநேரம் மட்டுமே அவகாசம் இருக்கிறது. அதற்குள் அவர்களால் திருட முடிந்ததா, பார்வையிழந்த ஷானை அவர்களால் ஏமாற்ற முடிந்ததா என்பது ‘லாஸ்ட் சிக்ஸ் அவர்ஸ்’ இதன் கதை.
படத்துக்காக பரத், ‘‘சிக்ஸ் பேக்” உடற்கட்டுடன். வசனம் அதிகம் இல்லாமல் நன்றாக நடிக்கிறார். எலிசபெத், ரேச்சல் என 2 பெயர்களுடன் திடுக்கிட வைக்கும் கதாபாத்திரத்தில் விவியாவின் நடிப்பு சிறப்பு.பார்வைத் திறன் பறிபோகும் பரத்துக்கு அவரது ஆற்றலை பெருக்க மேற்கொள்ளும் முயற்சிகளும் பயிற்சிகளும் பரபரப்பாக இருக்கின்றன. அதிலும் ஃப்ளாஷ் பேக்கில் கேப்டனாக தூய வெள்ளை ஆடையில் பளிச்சென்று வரும் பரத்தை பார்ப்பதற்கு மிடுக்காக இருக்கிறது. தன் தங்கைக்கு ஒரு கொடுமை நேர்ந்த போது அந்த அதிர்ச்சியையும் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அலட்டிக் கொள்ளாமல் நடித்திருப்பது அவரது திறமையான நடிப்புக்குச் சான்று.
கைலாஸ் மேனன் பின்னணி இசையும், சினு சித்தார்த் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு திகில் கூட்டுகிறது. டைரக்டர் சுனிஷ்குமார் ஒரு பக்கா சஸ்பென்ஸ் திரில்லரை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.
சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவுத் திறனை அவரது இருள் காட்சிகளின் மூலமே புரிந்து கொள்ள முடிகிறது.மலைப் பிரதேச வீடும், அதற்குள் நடக்கும் சம்பவங்களும்தான் படத்தின் ஹைலைட். அதிலும் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் முக்கியக் கதையே. அந்த இருட்டு நேரத்திற்குள் விதவிதமான லைட்டிங்குகளில் தனி கவனம் செலுத்தி ஒளிப்பதிவு செய்து வாவ் சொல்ல வைத்திருக்கிறார் சினு சித்தார்த்.
கைலாஷ் மேனன் இசையும் இந்த சஸ்பென்ஸ் படத்துக்கு பரபரப்பை கூட்டி இருக்கிறது. அருண் ராமவர்மாவின் சவுண்ட் மிக்சிங்கும் ரசிக்கும் விதத்தில் கவனம் பெறுகிறது.
மொத்தத்தில் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ க்ரைம் பிரியர்கள் பார்க்கலாம்.
மார்க் 3/5