குவைத் ; முதன் முறையாக எட்டு பெண்கள் நீதிபதிகளாக பதிவியேற்பு!

குவைத் ; முதன் முறையாக எட்டு பெண்கள் நீதிபதிகளாக பதிவியேற்பு!

குவைத் நாட்டில் முதல்முறையாக 8 பெண்களை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக புதிதாக 54 பேர் நியமிக்கப்பட்டனர். அதில், 8 பெண்கள் அடங்குவர்.பெண் நீதிபதிகளின் பணிகள் குறித்து குறிப்பிட்ட காலத்திற்குள் மதிப்பீடு செய்யப்பட்டு மற்ற முடிவெடுக்கப்படும் என குவைத் உச்சநீதிமன்ற குழுத் தலைவர் யூசெப் அல் மாதாவா கூறினார்.

இது குறித்துகுவைத் மகளிர் கலாச்சார மற்றும் சமூக சங்கத்தின் தலைவரான லுல்வா சலேஹ் அல் முல்லா கூறுகையில், நீதிபதிகளாக பணியாற்றுவதற்காக பெண்களின் உரிமைக்காக தனது அமைப்பு நீண்ட காலமாக போராடி வருகின்றது.

இந்த நியமனங்கள் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது, மேலும் நாடு அடுத்த கட்டத்திற்கு முன்னேறி வருகிறது என்று நம்புகிறேன் என கூறினார்.

குவைத்தில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை மற்றும் அரசியல் பதவிக்கு போட்டியிட 2005-ம் ஆண்டு உரிமைக் கிடைத்த நிலையில், தற்போது நீதித்துறையிலும் உரிமைக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!