”பேட் லக்” கட்டப்பாவக் காணோம்- எப்பூடி?

”பேட்  லக்”  கட்டப்பாவக் காணோம்- எப்பூடி?

‘பேட் லக் பாண்டி’ என்று பெயரெடுத்தவர் சிபிராஜ். அதாவது பிறக்கும் போதே அதிர்ஷ்டமில்லாதவன் என்பதால் இந்த பெயரெடுத்த ஒருவனிடம் ”இது உங்கூடவே இருந்தா ரொம்ப அதிர்ஷ்டம்” என்று வந்து சேர்கிற வாஸ்து மீனால் அவனுடைய வாழ்க்கை எப்படி மாறுகிறது? என்பது தான் இந்த ‘கட்டப்பாவ காணோம்’. ஆரம்பத்தில் நைட் கிளப்பில் மப்பில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷைப் பார்த்ததும் காதலில் விழுகிறார். ரொம்ப கேஷூவலாக பேசிக் கொள்ளும் இருவரும் வீட்டின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்யும் அவர்கள் குடும்பம் நடத்த பணமில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கையில், கட்டப்பா என்கிற வாஸ்து மீன் சிபிராஜின் தோழியான சாந்தினி மூலமாக அவர்கள் வீட்டுக்கு வந்து சேர்கிறது.

kat mar 18a

இதற்கிடையில் நார்த் மெட்ராஸ் பிரபல ரெளடியான மைம் கோபி ஆசை ஆசையாக வளர்த்து வந்த (அதே) அதிர்ஷ்ட -வாச்து மீன் கட்டப்பாவைக் காணவில்லையே என்று தேடித் தேடி அலையோ அலை என்று அலைந்து கொண்டிருக்கிறார். அதே சமயம் மீன் வந்த நேரம் தங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள் சிபிராஜூம், ஐஸ்வர்யா ராஜேஷூம். ஆனால் ஒரு ரெளடிக்கூட்டம் திடீரென் வீட்டுக்குள் நுழைந்து அவர்களை ஹவுஸ் அரெஸ்ட்டில் வைக்கிறது. ஏனிப்படி? அப்படியானால் அதிர்ஷ்ட மீன் வருகை உண்மையிலேயே சிபிராஜூக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க வில்லையா? பின்னளில் ‘பேட் லக் பாண்டி’ என்கிற கெட்ட இமேஜை மாற்றியதா? இல்லையா? என்பதுதான் கிளைமாக்ஸ்.

எப்படி எப்படியோ ஆக்‌ஷன் செய்வதற்கான ஆஜானுபாகுவான உடல்வாகு கொண்ட சிபிராஜ் காமெடி உடல் மொழியில் மெனக்கிட முயற்சித்து ஓரளவு ஸ்கோர் செய்துள்ளார் . நேஷனல் அவார்ட் வாங்கிய’ காக்கா முட்டை’ படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் ரொமான்ஸ் காட்சிகளில் பின்னியிருக்கிறார். சிபிக்கு ஐஸ்வர்யாதான் ட்ரெயினிங் கொடுத்துள்ளார் என்பது அப்பட்டமாக தெரியும் அளவுக்கு ஈடுபாடு. மற்றபடி லைட்டான மேக்கப், கொள்ளைக் கொள்ளுகிற சிரிப்புமாக மாடர்ன் கேர்ள் ஆக மப்பும், மந்தாரமுமாக வருகிறார்.

காமெடிக்கு கேரண்டியாக யோகி பாபு வந்தாலும் அவரை சில சீன்களிலேயே சுபம் போட்டு கடுப்பேத்துகிறார்கள். அதே சமயம் காளி வெங்கட் அடிக்கிற டபுள் மீனிங் சீன்கள் இப்போதைய காலேஜ் பசங்களிடமிருந்து சுட்டது அல்லது அவர்கள் சுட போவது என்றாலும் குடும்பத்துடம் பார்க்கும் போது காதுகள் சிவந்துதான் போகிறது.

இடையிடையே இந்த அழகு மீனிடம் எது கேட்டாலும் கிடைக்கும் என்று சொல்வதை நம்பி அதனிடம் உண்மையாகவே வேண்டுவதும், அன்பும், பாசமும் காட்டுகிற அழகு குழந்தை மோனிகாபு சோ க்யூட்,

இப்படிப்பட்ட குழந்தை, பள்ளி , படிப்பு காட்சிகளையெல்லாம் வைத்த இயக்குநர் திரைக்கதையை ‘ஆ’ பாச ரகத்தில் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மணி சேயோன்.

சந்தோஷ் தயாநிதியின் இசையும் ஆனந்த ஜீவாவின் ஒளிப்பதிவும் ஓ கே.

மொத்தத்தில் நல்ல கதைக்கான களம் கிடைத்தும் அதை முறையாக பயன்படுத்தாதுடன் எல்லை மீறிய வசனங்களால் கட்டப்பா காணோம் – மனசைத் தொடக் காணோம்!

error: Content is protected !!