ரசிகர்களோடு சக்சஸ் மீட் கொண்டாடிய ‘கன்னிமாடம்’ டீம்!

ரசிகர்களோடு சக்சஸ் மீட் கொண்டாடிய ‘கன்னிமாடம்’ டீம்!

ரூபி பிலிம்ஸ் ஹஷீர் தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்தி, சாயா தேவி, விஷ்ணு ராமசாமி, ஆடுகளம் முருகதாஸ், ப்ரியா ரோபோ ஷங்கர் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் ‘கன்னி மாடம்’.

ஆணவக் கொலைகளை மையப்படுத்தி உருவான இப்படம், அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.

அதிகமான திரையரங்குகளில் வெளியாகி, அரங்குகள் நிறைந்த காட்சிகளாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இன்று சென்னை ஏ வி எம் ராஜேஷ்வரி திரையரங்கில் ரசிகர்களோடு ரசிகர்களாக படம் பார்த்த படக்குழுவினர் அனைவரும், அவர்களோடு படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

வெற்றியை மிகப்பெரும் கேக் வெட்டி, ரசிகர்களுக்கு கொடுத்தும், படக்குழுவினர் அனைவரும் பகிர்ந்தும் தங்களது வெற்றியை கொண்டாடினர்.

மேலும், இவ்விழாவில் இசையமைப்பாளர் ஹரீஷ் சாய், ஒளிப்பதிவாளர் இனியன் ஜே ஹரீஷ், ரோபோ ஷங்கர், ஆகியோரும் உடன் இருந்தனர்

தமிழகத்தை உலுக்கிய உண்மை சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ளதால் ’கன்னி மாடம்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.