தீபக் மிஸ்ரா – தலைமை நீதிபதி பொறுப்பேற்றார்!
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி தலைமை நீதிபதி கெஹர் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ராவை நியமிக்கலாம் என அப்போதைய தலைமை நீதிபதி ஜே எஸ் கெஹர் பரிந்துரை செய்தார். இந்நிலையில் திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தின் 45 ஆவது தலைமை நீதிபதியாக தீபக் மிஷ்ரா பதவியேற்றார். குடியரசுத் தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தீபக் மிஸ்ராவை பொறுத்தமட்டில் 1996ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி ஒடிசா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி ஏற்றார். 1997 மார்ச் மாதத்தில் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்ட பின்னர் 1997 டிசம்பர் மாதம் பணி நிரந்தரம் செய்யப்பட்டார்.
ஜல்லிகட்டு விவகாரத்தில் பல சட்ட சிக்கல்கள் எழுந்த போது சாதுர்யமாக அணுகி தீர்ப்பு வழங்கினார். மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளிக்கு நள்ளிரவில் நடத்தி தூக்கு தண்டனையை உறுதி செய்தவர் போன்ற பல பெருமைகளுக்கு உரியவர்.