அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் & டீம் விண்வெளி பயணம் வெற்றி!- வீடியோ!

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் & டீம் விண்வெளி பயணம் வெற்றி!- வீடியோ!

ர்வதேச அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் பலத்த போட்டி நிலவி வரும் நிலையில், நேற்று மாலை 6.30 மணிக்கு ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் New Shepard விண்கலம் மூலம் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், அவரது சகோதரர் மார்க், 82 வயதான முன்னாள் பெண் விமானி மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 4 பேர் விண்வெளிக்கு சென்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.

உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ‌ஜெப் பெசோஸ் புளூ ஆரிஜின் என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை கடந்த 2000-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் தனது முதல் விண்வெளிப் பயணத்தை நேற்று தொடங்கியது.

இதற்காக அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து 3,600 கிமீ வேகத்தில் புறப்பட்ட New Shepard ராக்கெட் மூலம் பெசோஸ் உள்ளிட்ட 4 பேர் சுமார் 11 நிமிடங்கள் விண்வெளியில் மிதந்தனர்.இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு புறப்பட்ட விண்கலம் வளிமண்டல எல்லைக் கோடான கார்மன் கோட்டை கடந்து 6 கி.மீ தொலைவு வரை பயணித்தது. 11 நிமிடம் விண்வெளியில் பயணித்து பூமியை நோக்கி வந்த விண்கலம் பாரசூட் உதவியுடன் குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்கியது.

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரான ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் உருவாக்கிய விண்கலத்தில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. 1969ல் நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் காலடி வைத்த இதேநாளில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உட்பட 4 பேர் விண்வெளிக்கு சென்று திரும்பியுள்ளனர். எனவே, விண்வெளி சுற்றுலா இனி பிரபலமாக அதிக வாய்ப்புகள் உள்ளது என்று நம்பலாம்.