உலகின் முதல் உயிருள்ள பெண் பொ‌ம்மை – ஜப்பான் தயாரிப்பு வீடியோ

உலகின் முதல் உயிருள்ள பெண் பொ‌ம்மை – ஜப்பான் தயாரிப்பு வீடியோ

முன்னொரு காலத்தில் மரம், களிமண், தோல், துணி மற்றும் காகிதத்தாலான பொம்மைகள் பிரபலமாக இருந்தன. நம்மூர் தஞ்சாவூர் பொம்மைகள் இதற்கு சிறந்த உதாரணம். இவை சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காதவை. ஆனால், இன்றைய குழந்தைகள் விளையாட பிளாஸ்டிக்கால் ஆன எலக்ட்ரானிக் பொம்மைகளே அதிகம் கிடைக்கின்றன. இந்தப் பொம்மைகள் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பவை. அத்துடன் நம் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டியெல்லாம் மரப்பாச்சிகள், களிமண் பொம்மைகள், தோல் பாவைகள் என விதவிதமாகப் பொம்மைகளை வைத்து விளையாண்டிருப்பார்கள். சிலசமயம் களிமண்ணைப் பிசைந்து பொம்மைகளை அவர்களே உருவாக்கியதும் உண்டு. அந்தப் பொம்மைகள் இடத்தைத் தற்போது பார்பி போன்ற பொம்மைகள் பிடித்துவிட்டன.

அதே சமயம் ஜப்பான் போன்ற நாடுகளில் பெண்கள் கிடைக்காததால் பொம்பை பெண்களை கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தும் செய்தியும் நீங்கள் அறிந்ததுதான். இந்நிலையில் ஜப்பானில் உயிருள்ள பெண்ணைப் போல் வடிவமைக்கப்பட்ட பொம்மை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. லூலு ஹசிமோட்டோ எ‌னப் பெயரிடப்பட்டுள்ள இந்த பொம்மைக்கென பிரத்யேகமாக உடைகள் வடிவமைக்கப்பட்டு அவை விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. மனிதர்கள் நடமாடுவது போலவே இந்த பொம்மையும் சாதாரணமாக நடமாடி வருகிறது. இதற்கு லூலு ஹசிமோட்டோ எனறுப் பெயரிடப்பட்டுள்ளது.

டோக்கியோ நகரில் லூலு ஹசிமோட்டோ அழகாக நடந்து செல்லும் காட்சிகளும், நடனமாடும் விதமும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அழகிப் போட்டி ஒன்றில்‌ அரை இறுதிக்குத் தேர்வான 134 மாதிரிகளில் ஹசிமோட்டோவும் ஒன்று. இந்த பொம்மையை ஜப்பானைச் சேர்ந்த 23 வயதான பேஷன் டிசைனர் ஹிடோமி கோமகி வடிவமைத்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!