ஜெயிலர் – விமர்சனம்!

ஜெயிலர் – விமர்சனம்!

வ்வளவுதான் கதை.. இதுதான் சீன் என்று என்று சொல்லி ஒரு படத்தின் விமர்சனத்தைச் சொல்லி விட முடியாது என்பதற்கான உதாரணம் ‘ஜெயிலர்’.. கதை என்னவென்று கேட்டால் நேர்மையான போலீஸ் ஆபீசராக இருந்த இருந்த ஒருவர் சிலை கடத்தல் கும்பல் நெட்வொர்க்கை துரத்தும் போது இறந்து விட்டார் எனத் சேதி வர, மகனைக் கொன்றவர்களைப் பழிவாங்க கிளம்பும் அப்பா என்று பாலிவுட் தொடங்கி கோலிவுட்டில் பார்த்துப் போரடித்தக் கதைதான் இப்படத்தின் ஒன்லைன். ஆனால் காட்சி அமைப்புகளால் போரடிக்காமல் ஒரு பக்கா சினிமாவாக வழங்கி பாஸ் மார்க் வாங்கி விட்டார்கள்.

அதாவது ரிட்டயர்ட் ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் (ரஜினிகாந்த்), தன் ஒய்ப் (ரம்யா கிருஷ்ணன்), மகன் (வஸந்த் ரவி), மருமகள் (மிர்ணா), பேரன் (ரித்திக்) ஆகியோருடன் ஹேப்பியா இருக்கார். அப்பா சொல்லிக் கொடுத்தபடி மிகவும் நேர்மையான போலீஸ் ஆபிசரான அர்ஜுன், சிலை கடத்தல் கும்பல் ஒன்றை பிடிக்கத் தீவிரமாகச் செயல்படுகிறார். இதை விரும்பாத அக் கும்பல் அவரைக் கடத்துகிறது. இதை அடுத்து எதிரிகளைப் பழி வாங்கவும், தன் குடும்பத்தைக் காக்கவும் களமிறங்கி அதகளம் செய்கிறார் 72 வயசான நாயகன் ரஜினிகாந்த். பலரும் சொன்னது போல் பலமொழி சினிமாக்களில் சொல்லி சலித்த கதை தான். ஆனால், அதை ரஜினிகாந்த் என்கிற மாய பிம்பத்தோடு சொல்லிய போது முகத்தில் ஸ்மைலியை வரவழைத்தபடி முழு படத்தையும் பார்க்க வைத்து அனுப்பு விடுகிறார்கள்

இன்று வரை சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியை படு கேஷூவலாக எந்தவித அதிரடியும் காட்டாமல் ஒரு பேமிலியின் ஓல்ட் மேனாக அதுவும் பேரன் மற்றும் மகன் ஷூக்களுக்கு பாலிஷ் போட்டபடி அறிமுகம் ஆவதிலேயே ஆரவத்தை தூண்டி விடுகிறார்..தொடந்து பேரனிடம் விளையாடும்போதும், மகனை நினைத்து உருகும் போதும் ஒரு மாறுபட்ட ரஜினியைக் காண முடிகிறது. அத்துடன் அவ்வப்போது ரஜினிக்கே உரிய ஸ்டைலையும் நடிப்பையும் வழங்கி வாவ் சொல்ல வைத்து விடுகிறார். வசந்த் ரவி ஏதாவது ஆக்டிங் ஸ்கூல் போய் வந்தாலாவது நடிக்க முயற்சிப்பார் என்று நம்பலாம்.

வில்லன் விநாயகன் தன் நடிப்பில் ரஜினிக்கு நிகராக நிற்பது இதை நிரூபிக்கிறது. சாரே சாரே என்று மலையாளம் கலந்த தமிழில் இவர் பேசி வில்லத்தனம் செய்வது செம டெர்ரராகத் தெரிகிறது. படத்தில் யோகிபாபு செய்யும் காமெடியை விட சுனில் கிங்ஸ்லி செய்யும் காமெடிகள் சிரிப்பை வரவைக்கின்றன. ரம்யா கிருஷ்ணன் அடக்கமான அம்மாவாக வந்து போகிறார். லால், சிவராஜ் குமார் என சிலரின் பங்கு கதைக்கு தேவையா என்ற கேள்வி எழுந்தாலும் அவர்களது பங்கை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.

கேமராமேன் விஜய் கார்த்திக் கண்ணன், அடிக்கடி ஹெலிகேம் ஷாட்டுகளால் பிரம்மாண்டத்தையும், குளோசப் ஷாட்டுகளால் எமோஷ்னல்களையும் காட்டி அசத்துகிறார். படத்தின். பெரும் பலம் அனிருத்தின் அட்டகாசமான பின்னணி இசையும் , உக்கும் பாடலும்தான்.. ரஜினி மீதிருக்கும் வெறியில் அனிருத் படத்தின் நாயகன் அளவுக்க்கு பங்களித்து இருக்கிறார்.

தங்கப்பதக்கம், விக்ரம், இந்தியன், திரைப்படங்களின் சாயல் ஆங்காங்கே எட்டிப்பார்தாலும் அப்படி இருந்திருக்கலாம், இப்படி காட்டி இருக்க வேண்டாம் என்று சொல்ல நிறைய இருந்தாலும்  ஜெயிலர் மாஸ் மற்றும் டைம் பாஸ் மூவி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மார்க் 3.25/5

error: Content is protected !!