சபாஷ் என்ற வார்த்தையை வாங்கி விட்ட ‘இவன் தந்திரன்’-தான்

சபாஷ் என்ற வார்த்தையை வாங்கி விட்ட ‘இவன் தந்திரன்’-தான்

சென்னை கோட்டை வட்டாரத்தையும், கிரீன் வேஸ் சாலை உள்ளிட்ட அதிகார மையத்தையும் மட்டுமே அதிக நேரம் நோட்டமிட்டு களைத்து போயிருந்த திருமிகு. கழுகு-வை “இவன் தந்திரன்” படம் பார்த்து உரிய வகையில் ஒரு விமர்சனம் சப்மிட் பண்ணுமாறு பணித்திருந்தோம். படம் பார்க்க போனவர் உடனடியாக அலுவலகம் திரும்பாமல் தன் இருப்பிடத்துக்கு போய் ஓய்வு எடுத்துக் கொண்டு மறு நாள்தான் வந்து தலைக் காட்டினார். ‘ஏன்.. நேற்றே வரவில்லை?’ என்று கேட்ட போது ஷோ முடிந்து வெளியே வந்த போது படத்தின் தயாரிப்பாளர் கட்டாயப்படுத்தி கொடுத்த பிரியாணி-யால் அலுவலகம் வர முடியவில்லை என்று தெரிவித்தவரிடம், ‘அட.. நீர் வெளியிடங்களில் நீராகாரம் தவிர வேறு எதையும் வாங்கிக் கொள்ள மாட்டீர் என்றுதானே நினைத்திருந்தோம்’ என்று நம் சோகத்தை வெளிப்படுத்தினோம். உடனே கழுகார், “ தயாரிப்பாளர் கொடுத்த பிரியாணியை நான் சாப்பிட்டேன் என்றா சொன்னேன். அங்கு நான் வெஜ் பிரியாணி மட்டுமே கொடுத்த நிலையில் சக நிருபர்கள் சிலர் வெஜ் ஹோட்டலில் ட்ராப் செய்ய சொன்னார்கள். வாகன வசதி இல்லாத அவர்களை ஹோட்டலுக்கு அழைத்து போய் சாப்பிட வைத்து விட்டு வீடுகளில் ட்ராப் செய்யவே நேரமாகி விட்டது” என்று விளக்கம் அளித்தார்.

’சரி.. சரி. பட,ம் எப்படி?’ என்று ஆரம்பித்தோம்.

உடனடியாக பதில் சொல்லாத கழுகார் தன் ஜோல்னா பையிலிருந்த ஒரு ஐ பேடை ஆன் செய்து எதையோ பார்த்து விட்டு, “நம்ம இந்தியாவிலேயே எக்கச்சக்கமான இன்ஜினியரிங் பட்டதாரிகளை உருவாக்கும் மாநிலம் எது என்று கேட்டால் அது நம்ம தமிழ் நாடுதான். ஆமாம். இந்த இந்தியாவின் மொத்த இன்ஜினியர்களில் 25% தமிழகத்தில்தான் உருவாகிறார்கள். முன்னொரு காலத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த இந்த பொறியியல் என்ற இன் ஜினியரிங் படிப்பு, 2007ல் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டவுடன் பரவலாகி விட்டது. இன்ஜினியரிங் என்கிற கௌரவம், படித்தவுடன் கை நிறைய சம்பளத்தோடு வேலை என வண்ணமயமான வாழ்க்கை வாய்த்ததால் பெரும்பாலான மாணவர்கள் இப்படிப்புகளில் குவிந்தார்கள்.

ஆனால், இன்று நிலை மாறிவிட்டது. ஊருக்கு ஒரு இன்ஜினியர் இருந்த காலம் மலையேறி, வீட்டுக்கு 2 இன்ஜினி யர்கள் இருக்கிறார்கள். தகுந்த வேலை கிடைக்காமல், கிடைத்த வேலைக்குச் செல்லும் நிலை. மாணவர்களின் கவனம் பொறியியல் கடந்து வேறு திசைக்குத் திரும்புகிறது. 2015ல், மொத்தமுள்ள 536 பொறியியல் கல்லூரிகளில் உள்ள சுமார் 2 லட்சம் இடங்களில் 93 ஆயிரம் இடங்கள் நிரம்பவில்லை. சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில்தான் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதே எண்ணிக்கை இப்போ ரொம்ப குறைந்து விட்டது. இந்தாண்டு சில கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. பல துறைகள் காலியாக கிடக்கின்றன. அதனால பல்வேறு கல்லூரிகள் மூடி கொண்டு வரும் நிலைதான் இங்கு நிலவுகிறது” என்று நீண்ட விளக்கம் கொடுத்தார்.

‘ வெயிட்.. வெயிட்.. இவன் தந்திரன் படம் எப்படி என்று கேட்டால் ஐ பேடை பார்த்து இன்ஜினியர் காலேஜ்களின் போக்கைப் பற்றி  சொல்கிறீரே’ என்றோம்.

“இந்தப் படத்திலும் இந்த இன்ஜினியர் காலேஜ்கள் எப்படி எல்லாம் வியாபாரச் சந்தை ஆகி ஆகிவிட்டது, இக் கல்லூரிகளை வைத்து அரசியல்வாதிகள் செய்யும் கோல்மால், அதனால் மாணவர்கள் எங்ஙனம் பாதிக்கப்படு கின்றனர் என்பதைத்தான் ரொம்ப கேஷூவலாக சொல்லி இருக்கிறார்கள். பெரும்பாலும் சகலரும் ஊகிக்கும் காட்சிகளைக் கூட ரசிக்கும்படி சொல்லி இருக்கிறார்கள். சிம்பிளா சொல்லணுமுன்னா தற்போது தமிழகத்தில் பெரும்பாலான இன்ஜினியரிங் கல்லூரிகளில் நடக்கும் போக்கை கொஞ்சம் தெளிவாக அதே சமயம் ப்ரண்ட்லியாக எடுத்துக் காட்டி கவர்ந்து விட்டார் டைரக்டர் கண்ணன்.

’இந்த டைரக்டர் கண்ணன் இது வரை சக்சஸ் படங்கள் கொடுக்கவே இல்லையா?’

”ஊஹூம்.. ’வந்தான் வென்றான்’, ‘சேட்டை’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ என தொடர்ந்து இயக்குனர் கண்ணன் இயக்கிய படங்களெல்லாம் தோல்விதான். ஆனால் அதெல்லாமில்லை.. கண்ணன் படங்கள் கமர்ஷியலா தப்பிச்சவைதான் என்று இப்படத்தை வாங்கி ரிலீஸ் செய்யும் தனஞ்செயன் சூடு பறக்க விளக்கம் தருகிறார். ஆனாலும் உங்கள் ஆந்தையில் முன்னரே சொன்னது போல் இந்த முறை ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் ‘இவன் தந்திரன்’ திரைப்படத்தை இயக்கியது மட்டுமன்றி தயாரிக்கவும் செய்துள்ளார் இயக்குனர் கண்ணன். அவரது யோகம் கொஞ்சம் மார்க்கெட்டிங்ட் வித்தை தெரிந்த தனஞ்செயன் படத்தை பொறுப்பேற்று ரிலீஸ் செய்து இருப்பதால் பரவலாக வெளியாகி உள்ளது.

’அதிருக்கட்டும்,.. ஹீரோ கெளதம் கார்த்திக் தேறி விட்டாரா?’

” உம், அவரிடம் நல்ல இம்ப்ரூவ்மெண்ட் .. நடிப்பு, ரொமான்ஸ், ஃபைட்- எல்லாவற்றிலும் பாஸ் மார்க் வாங்கும் கெளதம் இனியாவது நடிக்க தேர்ந்தெடுக்கும் கதைகளில் ரொம்ப கவனம் செலுத்த வேண்டும்”

 ‘ஆர். ஜே. பாலாஜியின் காமெடி யூ ட்யூப்பில் ரவுண்டு கட்டி வந்ததே?’

”ஆமாம் , கதைக்கு பொருத்தமான ரோலில் ஆர்.ஜே.பாலாஜி வந்திருப்பதும், பாக்கிஸ்தான் பக்கத்துல பத்து கிரவுண்ட் வாங்கிப் போட்டு , நமீதா , சினேகாவை விட்டு இன்ஜினியரிங் காலேஜ் திறந்து., கோடி கோடியாய் பணம் பண்ணும் கல்லூரி முதலாளிகளுக்கு செம ஆப்பு மச்சி….” என்பதும் இன்ஜினியங், ஐ.டி டிப்பார்ட்மெண்ட் வாசிகள் படும் அவஸ்தைகளை மூச்சு விடாமல் பேசுவதும், நாயைத் தேடி போய் பீட்டாவைக் கலாப்பது, ஆட்டோகாரரிடம் OLA & UBER வந்தப்புறம் சவாரி கம்மிஆச்சுல்ல முன்னாடியே மீட்டர் போட்டிருந்தா நாங்களும் உங்களை சப்போர்ட் பண்ணியிருப்போமில்லே என ஆர்கியுமெண்ட் செய்வது, ‘கூவத்தூர்’ ரிசார்ட்டை நினைவுப்படுத்துவது என்று டாபிக்கலா அவ்வப்போது டயலாக்கை அவிழ்த்து விட்டு அடிக்கடி கைத்தட்டலை வாங்குகிறார்”.

’நாயகி பற்றி சொல்ல ஒன்றுமே இல்லையா?’

மிடில் கிளாஸ் இன் ஜினியரிங் காலேஜ் மாணவி ஆஷாவாக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் அழகும், நடிப்பும் ஒருங்கே கொண்ட நடிகை என்பதை நிரூபித்துள்ளார். இவருக்கும் நாயகனுக்குமான காதல் சீன்களை படிப்படியாக சொல்லி அதிலும் ஒரு மழை சீசனில் கெளதம் தன் லவ்வை சொல்வதும் அதர்கு ஷ்ரத்தா ஆன்சர் + ஃபாலோ அப்பும் மணிரத்னம் சிஷ்யன் என்பதை நிரூபிக்கிறது..

ஆக. மொத்தத்திலே ?

எடுத்துக்கிட்டது என்னவோ நம்மூரு எஜூகேஷன், ஊழல் என்ற அரதப் பழசான சப்ஜெக்ட்தான். இது கொஞ்சம் சறுக்கினாலும் யூ டியூப் சினிமா போல் ஆகி விடும், அதே சமயம் ரிவர்ஸ் என்ஜினியர் என்ற பெயரில் காட்டும் காட்சிகள் பார்வையாளனுக்கு நம்பகத்தன்மையை கொடுக்க வேண்டும். அதிலும் ஜஸ்ட் இரண்டு மணி நேரத்தில் மேற்படி இரண்டையும் பேலன்ஸ் செய்து சபாஷ் என்ற வார்த்தையை வாங்கி விட்ட இவன் தந்திரன்-தான்

error: Content is protected !!