பேங்க் ஆஃப் பரோடாவில் ஐடி வேலைவாய்ப்பு!

பேங்க் ஆஃப் பரோடாவில்  ஐடி வேலைவாய்ப்பு!

கவல் தொழில்நுட்பத் துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தி! இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda), தனது தகவல் தொழில்நுட்பப் பிரிவில் காலியாக உள்ள 418 சிறப்பு அலுவலர் (Specialist Officer – IT) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நவீன வங்கிச் சேவைகளில் ஏஐ (AI), கிளவுட் (Cloud), மற்றும் டேட்டா சயின்ஸ் (Data Science) போன்ற தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில், தகுதியான பட்டதாரிகளைத் தேடி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

மொத்தம் 418 இடங்கள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் சில முக்கியமானவை:

  • டெவலப்பர்கள்: Full Stack JAVA, MERN, Mobile App, மற்றும் API டெவலப்பர்கள்.

  • நவீன தொழில்நுட்பம்: AI இன்ஜினியர் (GenAI/NLP/ML), டேட்டா சயின்டிஸ்ட், மற்றும் டேட்டா இன்ஜினியர்.

  • நிர்வாகப் பணிகள்: நெட்வொர்க், சர்வர், டேட்டாபேஸ் மற்றும் கிளவுட் இன்ஜினியர்கள்.

  • வங்கித் தொழில்நுட்பம்: ஃபினாகிள் (Finacle) டெவலப்பர்கள்.

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் அதிகாரிகளுக்குப் பொறுப்பிற்கு ஏற்பக் கார்வாரியான சம்பளம் வழங்கப்படும்:

  • Scale I: மாதம் ரூ. 48,480 முதல் ரூ. 85,920 வரை.

  • Scale II: மாதம் ரூ. 64,820 முதல் ரூ. 93,960 வரை.

  • Scale III: மாதம் ரூ. 85,920 முதல் ரூ. 1,05,280 வரை.

தகுதி மற்றும் வயது வரம்பு:

  • கல்வித்தகுதி: பொறியியல் துறையில் B.E / B.Tech அல்லது M.E / M.Tech அல்லது MCA முடித்திருக்க வேண்டும். தொடர்புடைய துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை உண்டு.

  • வயது: 19.02.2026 தேதியின்படி, குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி வயதுத் தளர்வு உண்டு.

தேர்வு மற்றும் விண்ணப்ப முறை:

  • தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழக மாணவர்களுக்குச் சென்னையில் தேர்வு மையம் அமைக்கப்படும்.

  • கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ. 850. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 175 மட்டுமே.

  • விண்ணப்பிக்க: ஆர்வமுள்ளவர்கள் bankofbaroda.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முக்கியத் தேதி: விண்ணப்பிக்கக் கடைசி நாள்: பிப்ரவரி 19, 2026.

Related Posts

error: Content is protected !!