ஹீரோயின் சப்ஜெக்ட் படத்துக்கு க/பெ.ரணசிங்கம் பெயர் ஏன்? – ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்!

ஹீரோயின் சப்ஜெக்ட் படத்துக்கு க/பெ.ரணசிங்கம் பெயர் ஏன்? – ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்!

வரும் இரண்டாம் தேதி ஓடிடியில் ரிலீஸாக இருக்கு க/பெ ரணசிங்கம் படக் கதையைக் கேட்ட பின் அதில் வரும் ‘ரணசிங்கம்’ கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதியை ஐஸ்வர்யா ராஜேஷ்தான் பரிந்துரை செய்தாராம், அது நெசமா? அப்படீன்னு நம்ம கட்டிங் கண்ணையா ஐஸ்-கிட்டே கேட்டார்

ஆமாங்க. அந்த கதையை சொன்ன டைரக்டர் விருமாண்டி அறம்’ படத்தின் இணை இயக்குநர். அவர் ஏற்கெனவே உதவி இயக்குநராக 20 வருட அனுபவம் கொண்டவர். தமிழ் ரசிகர்கள் நன்கு அறிந்த முதுபெரும் கலைஞர் பெரிய கருப்புத் தேவரின் மகன். மதுரை மாவட்டம் உசிலம் பட்டியைச் சேர்ந்தவர். தண்ணீர் பஞ்சத்தின் பின்னணியை நேரடியாக அறிந்தவர். அவர் கதை சொல்லத் தொடங்கிய பத்தாவது நிமிடத்திலேயே இந்தப் படத்தில் நடிப்பது என்று முடிவெடுத்து விட்டேன்.

மேலும் அந்தக் கதையைக் கேட்கும் போதே ரணசிங்கம் கேரக்டருக்கு விஜய் சேதுபதிதான் மனதில் வந்து நின்றார். அவரோடு நிறைய படங்களில் நடிசசிருக்கிறேன். பர்செனலாக அவரை நல்லா தெரியும். இயக்குநரிடமும் தயாரிப்பாளர் ராஜேஷ் சாரிடமும் ‘நாம் விஜய் சேதுபதியிடம் கேட்போம்’ என்றேன்.

அவர்களோ… ‘ஏம்மா.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமாச்சே இது இதில் நடிக்க அவர் ஒப்புக்க மாட்டார்’ அப்பட்டீன்னு அசால்ட்டாச் சொன்னாங்க. ஆனால், கதையைக் கேட்ட உடனே ‘ஆஹா இது நான் பண்ணியே ஆக வேண்டிய கேரக்டர்’ -ன்னு விஜய் சேதுபதியே சொன்னார்.

அவர் வந்தபிறகு இந்தப் படம் இன்னும் பெரிய படமாக மாறிவிட்டது.

இப்ப ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் படத்துக்குக் கதாநாயகியின் கதாபாத்திரப் பெயரை வைப்பதற்கு பதிலாக ‘கணவர் பெயர் ரணசிங்கம்’ என்று வைத்திருக்கிறார்களே.. அதை நீங்கள் எதிர்க்கலையா -ன்னு கேட்கிறாங்க.

இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, அந்தக் கேள்விக்கான அவசியமே இருக்காது. அரியநாச்சி – இதுதான் என் கேரக்டர் நேம் என் ஹஸ்பெண்ட் சட்டையை போட்டுகிட்டு வரும் காட்சி ஒன்றுபோதும் இந்தத் தலைப்புக்கான நியாயத்தைப் புரியவைக்க – அப்படீன்னார்

error: Content is protected !!