ஐ.பி.எல் – 2013: சென்னை சூப்பர் கிங்க்ஸ் சாம்பியன்!

ஐ.பி.எல் – 2013: சென்னை சூப்பர் கிங்க்ஸ் சாம்பியன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

16வது ஐபிஎல் சீசன் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக அந்த போட்டி கைவிடப்பட்டு நேற்று மீண்டும் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரரான சாஹா 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அருமையான தொடக்கத்தை கொடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான கில் 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் தமிழக வீரரான சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் ஆறு சிக்சர்கள், எட்டு பவுண்டரிகளுடன் 96 ரன்கள் விளாசி தெறிக்கவிட்டார். ஹர்திக் பாண்ட்யா 21 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக குஜராத் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் எடுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் 215 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. அதன் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் மழை நின்றாலும் மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக பல்வேறு சோதனைகள் மற்றும் மாற்று நடவடிக்கைகளுக்குப் பிறகு 12.10 மணி அளவில் ஆட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தனர். அப்போது ஓவர்கள் குறைக்கப்பட்டு 15 ஓவர்களில் 171 ரன்களை எடுக்க வேண்டும் என சென்னை அணிக்கான இலக்கை மாற்றி அமைத்தனர்.

சென்னையின் தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 16 பந்துகளில் 26 ரன்களும், கான்வே 25 பந்துகளில் 47 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ரஹானே 13 பந்துகளில் 27 ரன்கள் விளாசினார். கடைசியில் நான்கு ஓவர்களில் சென்னை அணியின் வெற்றிக்கு 54 ரன்கள் தேவையாக இருந்தது. 12 வது ஓவரில் துபே 2 சிக்சருடன் 15 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்த ஒரு ஓவரிலும் அம்பதி ராயுடு நன்றாக விளையாடினார். அணியின் வெற்றிக்கு 14 பந்துகளில் 23 ரன்கள் தேவையென்ற நிலையில் களமிறங்கிய தோனி டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். கடைசி ஓவரில் சென்னையின் வெற்றிக்கு 13 பந்துகள் தேவை என இருந்தது. அந்த ஓவரை மோஹித் சர்மா வீசினார். அதன் முதல் பந்தை சிவம் துபே ரன் ஏதும் எடுக்காமல் விட்டுவிட்டார். அடுத்த மூணு பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டதால் கடைசி இரண்டு பந்துகளின் பத்து ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா அதை சிக்சருக்கு பறக்கவிட்டு பரபரப்பை அதிகமாக்கினார். கடைசி ஒரு பந்தில் 4 ரன்கள் என்ற நிலையில் பவுண்டரி விளாசி வெற்றிக்கனியை சென்னை அணியிடம் ஒப்படைத்தார் ஜடேஜா.

இதன் காரணமாக சென்னை அணி 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜடேஜா 6 பந்துகளில் 15 ரன்களும், துபே 21 பந்துகளில் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலமாக சென்னை அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஆட்ட நாயகனாக கான்வேயும், தொடர் நாயகனாக குஜராத் அணியில் இந்த சீசனில் 3 சதங்களை எடுத்த சுப்மன் கில்லும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

error: Content is protected !!