ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் இந்திய வீராங்கனை மானா படேல்!

ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் இந்திய வீராங்கனை மானா படேல்!

கமதாபாத்தை சேர்ந்த நீச்சல் வீராங்கனை மானா படேல் வெற்றி பெற்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி மற்றும்மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே, ஆடவர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீஹரி நடராஜ், சஜன் பிரகாஷ் ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு சென்றுள்ள நிலையில், நீச்சல் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனையாக மானா படேல் தகுதி பெற்றுள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்த 21 வயதான மானா பட்டேல் தன்னுடைய 7 வயதிலேயே நீச்சல் பயிற்சியைத் தொடங்கியவர். தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் , 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் போட்டியில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேசியளவிலான நீச்சல் போட்டியில் முந்தைய சாதனையை முறியடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். அதே ஆண்டு ஒலிம்பிக் கோல்டு க்யூஸ்ட் போட்டியில் கலந்துகொண்ட முதல் இந்தியர் என பாராட்டப் பெற்றார். அதேபோல் 2018-ம் ஆண்டு நடைபெற்ற 72-வது சீனியர் தேசிய நீச்சல் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களைப் பெற்று சாதனைப்படைத்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் பிரிவில் கலந்துகொள்ளும் முதல் இந்திய வீராங்கனை என்ற சரித்திர சாதனையைப் படைத்துள்ளார் மானா படேல். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லும் மூன்றாவது இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றுள்ளார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!