“நான் இந்தியாவைச் சேர்ந்த பெண் மட்டுமல்ல. பூமியைச் சேர்ந்த பெண்ணும் தான். நான் அப்படி இருப்பதில் பெருமைப்படுகிறேன்.. இன்று நான் உங்கள் அனைவரிடமும் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். பேசுவதை நிறுத்திவிட்டு செய்யத் தொடங்குங்கள். இந்த புவி வெப்பமயமாதலை தடுக்க வெற்று வாக்குறுதிகளை அளிக்காமல், அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வாருங்கள்” என பேசி உலக தலைவர்கள் மத்தியில் உரையாற்றி சர்வதேச கவனம் பெற்றுள்ளார் தமிழகத்தை சேர்ந்த 14 வயது சிறுமி.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி வினிஷா உமாசங்கர். இவர் சூரிய சக்தியில் இயங்கும் இஸ்திரி வண்டியை உருவாக்கியவர். சூரிய சக்தியில் இயங்குவதால் கரியின் பயன்பாடு குறைந்து சுற்றுசூழல் பாதுகாக்கப்படும் என்ற இவரது கண்டுபிடிப்புக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்தது. பிரிட்டன் இளவரசர் வில்லியம் அளிக்கும் எர்த்ஷாட் பரிசு போட்டிக்கும் இவர் தேர்வானார். இவருக்கு கிளாஸ்கோ காலநிலை மாற்ற மாநாட்டில் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றிய வினிஷா உமாசங்கர், “நான் இந்தியாவில் இருந்து மட்டும் பேசவரவில்லை. பூமியில் இருந்து பேச வந்துள்ளேன்” என கூறி தன் உரையை தொங்கினார்.
தொடர்ந்து பேசுகையில், “எங்களுடன் சேர உங்களை அழைக்கும்போது, நீங்கள் இல்லாவிட்டாலும் நாங்களே வழிநடத்துவோம். தாமதித்தாலும் நடவடிக்கை எடுப்போம். நீங்கள் கடந்த காலத்தில் சிக்கிக்கொண்டாலும், எதிர்காலத்தை நாங்கள் உருவாக்குவோம். ஆனால் தயவுசெய்து எனது அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
எனது தலைமுறையில் பலர் வெற்று வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்றத் தவறிய தலைவர்கள் மீது கோபமும் விரக்தியும் அடைந்துள்ளனர். மேலும் நாங்கள் கோபப்படுவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன. ஆனால் எனக்கு கோபம் கொள்ள நேரமில்லை. எனக்கு செயல்பாடு முக்கியமானது.” என்று சொல்லி அசத்தினார்
படத்தின் கதை என்னவென்றால் குடும்பத்தின் வறுமையின் காரணமாக ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று கிராமத்தில் இருந்து மூன்று இளைஞர்கள் சென்னை…
டெல்லியில் கடந்த ஐந்து மாதங்களாக ஒரு துயர நாடகம் அரங்கேறி வருகிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இயங்குபவர் ப்ரஜ்…
சென்னை சூப்பர் கிங்க்ஸ் கேப்டன் தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.…
போன நிதியாண்டைக் காட்டிலும், நடப்பு 2022-23ஆம் நிதியாண்டில் 500 ரூபாய் கள்ளநோட்டின் எண்ணிக்கை 14 சதவிகிதம் அளவிற்கு அதி கரித்துள்ளது.…
முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்திட சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகளுக்கு நான் மேற்கொண்ட 9 நாள் பயணத்தை நிறைவுசெய்து தாயகம் திரும்புகிறேன். என்…
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா…
This website uses cookies.