ரயில்களில் பயணிகள் கொண்டு செல்லும் லக்கேஜ்களுக்கான உச்சவரம்பு நிர்ணயம்!

ரயில்களில் பயணிகள் கொண்டு செல்லும் லக்கேஜ்களுக்கான உச்சவரம்பு நிர்ணயம்!

நம் நாட்டில் ரயில்வே பயணம் மிக இனிமையாக இருக்கும் என்பதால் இங்குள்ள ரயில்களில் எப்போதும் கூட்டம் நிறைந்தவையாக இருக்கும். அது வடமாநில ரயில்களாகட்டும் அல்லது தென் மாநில ரயில்கள் ஆகட்டும் எல்லாமே எப்போதும் கூட்டம் எக்கச்சக்கமாகவே காணப்படும். இதில் நீண்ட தூரமோ குறைந்த தூரமோ ரயில்களில் பயணம் செய்யும்போது நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று லக்கேஜ். அது ஏ.சி வகுப்பாக இருந்தாலும் சரி, அல்லது முன்பதிவு செய்யப்படாத வகுப்பாக இருந்தாலும் சரி பயணிகள் அனைவரும் எதிர்கொண்டு லக்கேஜ் தொந்த ரவுளைச் சந்தித்திருப்போம். இதற்கிடையே, ரயில்களில் பயணம் மேற்கொள்ளும்போது அதிகமாக லக்கேஜ்களை எடுத்து வருகின்றனர். இதனால் சக பயணிகளுக்குத் தொந்தரவு ஏற்படுகிறது என ரயில்வே-க்கு புகார் அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில் ரயில்களில் பயணிகள் எடுத்து செல்லக்கூடிய லக்கேஜ்களுக்கு ரயில்வே வாரியம் உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது.

அதன்படி முதல் ஏசி வகுப்பில் பயணம் செய்வோர் கட்டணம் செலுத்தாமல் 70 கிலோ லக்கேஜ்களையும், முதல் வகுப்பு மற்றும் ஏசி இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்வோர் 50 கிலோ லக்கேஜ்களையும் கட்டணமின்றி எடுத்து செல்லலாம். மூன்றாம் வகுப்பு ஏசி, ஏசி CHAIR CAR, படுக்கை வசதி பிரிவு மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணிப்பவர்கள் 35 கிலோ லக்கேஜ்களை கட்டணம் செலுத்தாமல் எடுத்து செல்ல முடியும்.

இந்நிலையில் கட்டணம் செலுத்தி எடுத்து செல்லக்கூடிய லக்கேஜ்களுக்கும் ரயில்வே வாரியம் உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது.அதன்படி முதல் வகுப்பு ஏசியில் பயணம் செய்வோர் 150 கிலோ லக்கேஜ்களையும், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்வோர் 100 கிலோ லக்கேஜ் களையும் எடுத்து செல்ல முடியும். 3ம் வகுப்பு ஏசி மற்றும் ஏசி CHAIR CAR பெட்டியில் பயணம் செய்வோர் அதிகபட்சமாக 40 கிலோ லக்கேஜ்களையும், படுக்கை வசதி கொண்ட பெட்டியில் செல்வோர் 80 கிலோ லக்கேஜ்களையும் எடுத்து செல்லலாம்.

இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்வோர், அதிகபட்சமாக 70 கிலோ லக்கேஜ்களை கொண்டு செல்லலாம். உச்ச வரம்பையும் மீறி கூடுதலாக லக்கேஜ்களை எடுத்து செல்லும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே வாரியம் எச்சரித்துள்ளது.

Related Posts

error: Content is protected !!