June 7, 2023

கொரோனா எனப்படும் கோவிட் -19 தாக்குதல் தேசிய பேரிடர்!- மத்திய அரசு அறிவிப்பு!

உலகம் முழுக்க பரவி வரும் கொள்ளை நோய் கொரோனா எனப்படும் கோவிட்- 19 என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதனால் இந்த கோவிட்-19 வைரஸ் தாக்குதலை தேசிய பேரிடர் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இந்தியாவில் எங்கு வசிக்கிறவர்களும் நிவாரணம் கோரிப் பெறலாம். கோவிட் – 19 வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு தடவை நிவாரணம் வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த கோவிட் – 19 வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.4 லட்சம் வழங்க இந்த றிவிப்பு வகை செய்கிறது.பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கோவைக்கு வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணத் தொகையை பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து உரிய சான்றிதழை பெற்று அத்துடன் விண்ணப்பம் அனுப்ப வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் மாநில தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்து உள்ளது. 67 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் உள்பட 87 பேர் பாதிக்கப் பட்டு உள்ளனர். இந்த 87 பேருடனும் தொடர்புடைய 4 ஆயிரம் பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று நோய் என அறிவித்து அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு.

பொது சுகாதாரசட்டம் 1939 கீழ் அறிவிக்கப்பட்ட தொற்றுநோய் பட்டியலில் சேர்த்ததால்   தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எங்கு சிகிச்சை அளிக்கப் பட்டாலும் சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிக்காத மருத்துவர்கள், ஆய்வகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது