June 7, 2023

சரித்திரத்தை மீட்கும் இந்தியா! உலகத்தின் மையப்புள்ளியாக மட்டுமல்ல குருவாக உருமாறுகிறது!

ன்றைய வல்லரசான அமெரிக்க ஜனாதிபதி ரஷ்யாவை தனது ஐநாசபை பேச்சில் மிக பலமாக கண்டித்தார். ஆனால் அவரின் தேசத்திலேயே கூட அந்த பேச்சு கவனிக்கப்படவில்லை. ஆனால் மோடி அவர்கள் ரஷ்ய அதிபரை நேரில் சந்தித்தபோது, “இது போருக்கான காலமல்ல, பேசி தீர்க்க வேண்டிய நேரம்”, என்றுரைத்தது. உலகெங்கும் செய்தியாக பரவியது. இந்தியாவை வழக்கமாக இழிவு படுத்தும் அமெரிக்க பத்திரிக்கைகள் கூட அதை பெரிய அளவில் முக்கிய செய்தியாக்கியது. அதற்கு புடின் கோரிக்கையை மதிப்பதாகவும், அதை பரிசீலப்பதாக சொன்னார். அதாவது உங்கள் பேச்சு எப்போது மதிக்கப்படும் என்றால், அது செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை வரும்போதுதான். அந்த நிலையில் இன்றைய வல்லரசான அமெரிக்காதானே இருந்தது, அப்படி என்ன மாற்றம் நிகழ்ந்து விட்டது?

 

உக்ரைனுக்கு தான் இருப்பதாகவும், தன் பின்னால் நேட்டோவும் மேற்கத்திய நாடுகளும் இருப்பதாக கொடுத்த உறுதிமொழிகளால் உக்ரைன் கொக்கரிக்க, ரஷ்யா தாக்க ஆரம்பித்தபோது காற்றில் பறந்தது அந்த உறுதிமொழிகள். பொருளாதார தடைமூலம் ரஷ்யாவை தனிமைப்படுத்தப் போவதாக அமெரிக்கா கொக்கரித்தது. ஆனால் அந்த தடையை தன் உற்ற நண்பர்கள் கூட அதை பின்பற்றவில்லை. தானும் வல்லரசுதான் என்று ஒல்லும் சீனாவை அதனால் அடக்க முடியாது என்பது அதற்கு தெரியும். ஆனால் அது எதிர்பாராத இந்தியா, அமெரிக்க தடையை கண்டுகொள்ளவே இல்லை. இந்தியா மீதும் பொருளாதார தடை பாயும் என்று எச்சரித்தது. உங்கள் நட்பு நாடுகளான ஐரோப்பிய யூனியன்கள் செய்வது என்ன விளையாட்டா என்று திருப்பி கேட்டது. ஆனாலும் இந்தியா சொன்னது, நாங்கள் நிறுத்திக்கொள்கிறோம், ரஷ்யா கொடுக்கும் விலையில் நீங்கள் கச்சா எண்ணெய் கொடுக்க முடியுமா என்றபோது பதில் சொல்ல முடியவில்லை, பதுங்கியது அமெரிக்கா..

ரஷ்யாவின் பணம் அமெரிக்க வங்கிகளில் பில்லியனில் இருக்க, அது பயன்படுத்த முடியாது போய்விட்டது. அதனாம் ரஷ்யா வர்த்தகம் செய்ய முடியாது என்று நினைக்க, ரஷ்யாவின் ரூபிள் வீழும் என்று நினைக்க, ஐரோப்பிய யூனியன்கள் ரூபிளில் கொடுத்து எரிபொருள் வாங்க வேண்டிய சூழலால் அதுவும் முடியவில்லை. இந்தியா தனது ரூபாயை கொடுத்து கச்சா எண்ணெயை மிக குறைவான விலைக்கு வாங்கியது. 2% ஆக இருந்த அதன் இறக்குமதி, இரண்டாவது பெரிய இறக்குமதியாக மாறியது. அது மட்டுமல்ல, அமெரிக்க டாலருக்கு மாற்றாக தனது ரூபாயை உலகத்தின் நாணயமாக்கும் முயற்சி நடக்கிறது.

எந்த ஒரு பிரச்சினை வந்தாலும், கச்சா எண்ணெய் ஏற்றம் மூலம் உலகத்தில் விலைவாசி எகிறி, அது ஏழை நாடுகளை மட்டுமே பாதிக்கும். அதன் டாலர் டிமண்டினால் ஒருபோதும் அமெரிக்காவை பாதிக்காது. இந்த முறை முதன் முதலாக அமெரிக்க 40 ஆண்டுகளில் இல்லாத பண வீக்கத்தை அது சந்தித்துள்ளது. அது கொடுத்த உதவி தொகைகளெல்லாம் அதன் விலைவாசியை மேலும் மோசமாக்கியது. உலகத்தில் எந்த பொருளும் எனக்கு கிடைத்தது போக மீதிதான் மற்ற நாடுகளுக்கு என்று உயர்ந்த குடியாக வாழ்ந்த அமெரிக்கா, இந்தியாவை கோதுமை ஏற்றுமதி செய்ய நிர்பந்தித்தது. இந்தியா சம்மதித்தது. ஆம், இந்தியா கோதுமையை ஏற்றுமதி செய்கிறோம், ஆனால் அமெரிக்கவிற்கு அல்ல. ஏழை நாடுகளுக்கு என்றது. நாங்கள் கூடுதல் விலை தருகிறோம் என்றது. இந்தியா, இதை நாங்கள் விற்கவில்லை இலவசமாக அவர்களுக்கு தருகிறோம் என்றது. கூடுதல் விலை கொடுத்து வாங்கிவிட நினைத்த அமெர்க்காவிற்கு இந்தியா சொன்னது செவுட்டில் அடித்த இடியானது.

ஐரோப்பிய யூனியனில் வெகு சில நாடுகளே இந்த எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் தடுமாறும்போது, அங்கே இருக்கும் ஏழை நாடுகள் என்ன செய்யும்? கோபத்தின் உச்சிக்கே சென்றது. அமெரிக்காவிற்கு ஏன் அடிபணிகிறீர்கள்? இந்தியாவை போல சுயமாக முடிவெடுங்கள் என்று நம் முடிவுகளை நியாயப்படுத்தியது. அவர்கள் மட்டுமல்ல, நம் எதிரியான பாகிஸ்தான் இந்தியாவைப்போல சுய சார்பு நிலை நமக்கு தேவை என்றது,சீனா ஆச்சர்யப்பட்டு தொடர் செய்த்யாக்கிய்து.

எதை செய்தாலும் அமெரிக்காவின் குரலுக்கு இணங்கி போவதைவிட வேறு வழியில்லை என்று முடங்கி போவதே வாழ்க்கை. நமக்காக யாரும் குரல் கொடுக்க மாட்டார்கால் என்று இருந்த ஏழைநாடுகளுக்காக, இந்தியா கொடுத்த குரல், அவர்களை வெகுவாக ஈர்த்தது. அதன் விளைவாக நூற்றாண்டுகளாக் தங்களது இயற்கை வளங்களை அமெரிக்கர்களுக்கும், பின்னர் சீனாவிற்கும் கொடுத்தபோதும் நமக்கு பசி தீர்க்க முடிய வில்லையே என்று இருந்தபோது, உணவு பொருள் மட்டுமல்ல, மோசமான கொரானா காலங்களில் பெரிய தொகை கொடுத்து தடுப்பூசி வாங்க முடியாத காலங்களில், இலவசமாக தடுப்பூசி கொடுத்த இந்தியா, அவர்களுக்கு இன்று தெய்வமாக தெரிகிறது. அதன் விளைவாக இந்தியாவை தங்கள் இயற்கை வளங்களை பயன்படுத்திக்கொள்ள அழைக்கிறது. காரணம், இந்தியா ஒரு சுய நலமற்ற நாடு, அது தானும் உயர்ந்து, தம்மையும் உயர்த்தும் என்று நம்பியதால்.

சீனாவை எதிர்க்க, அதை சுற்றியும் எதிரிகளை அமெரிக்கா ஒன்று சேர்க்க முயன்றபோது, உன்னை நம்பி நாளை உனக்கு அடிமையாக தயாரில்லை என்று அதன் கடந்த கால அனுபவங்களால் தவிர்த்த நாடுகள், இந்தியா சீனாவை எதிர்த்தபோது, அது நம்முடன் அணிசேர தயார் என்று அறிவித்தது. உனக்கு தேவையான் ஆயுதங்களை எங்களால் தர முடியாது, ஆனால் உங்கள் படைகள் தங்கிச்செல்ல அனைத்து உரிமைகளையும் தருகிறோம். தேவைப்பட்டால், எங்கள் ராணுவ உதவிகளையும் தருகிறோம் என்றது. நம்மிடம் இருந்து ஆயுதங்களையும் வாங்குகிறது. எதிர்பார்க்காத அமெரிக்கா, சீனாவை எதிர்க்க நானும் உதவுகிறேன் என்று மோதலை தூண்டியது. அதன் நோக்கம் என்பது நம்மை தூண்டிவிட்டு, குளிர்காய நினைக்கிறது. அந்த போரில் யார் தோற்றாலும் அதற்கு லாபமே என்பது அதன் கணக்கு என்பதை நன்கு உணர்ந்த இந்தியா, இது என்னுடைய பிரச்சினை, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று மறுத்தது. இதுவரை முன்னெடுத்த காலை பின்வைக்காத சீனா, முதன் முறையாக பின்வாங்கியது. அது செய்த சைகாலஜிகள் போர் என்பதெல்லாம் இங்கே வேகாது என்று பாடம் புகட்டியது. சீனாவை வெல்ல, அதன் பொருளாதாரத்தை தாக்குவதுதான் எளிய வழி, அழிவற்ற யுக்தி என்று இந்தியா அடியெடுக்க, தடியெடுக்க முடியாத சீனா தடுமாறுகிறது.

இந்தியாவின் செல்வாக்கு மட்டுமல்ல,அதன் பலமும் உயர்கிறது என்று புரிந்து கொண்டு, அதை பாகிஸ்தான் மூலமே சரி செய்ய முடியும் என்று அதற்கு F16 விமானங்களை மேம்படுத்துவதாக அறிவித்தது. அதில் இரண்டு நன்மைகள், ஒன்று பாகிஸ்தானை சீனாவிடம் இருந்து மீட்பது. அடுத்து இந்தியாவை பலவீனப்படுத்துவது. அதனால் இந்தியா தன் காலில் விழும் எஎன்பது அதன் எதிர்பார்ப்பு. ஆனால் தீவிரவாதிகளின் கூடாரமான பாகிஸ்தானுக்கு செய்யும் தீவிரவாதிகளை ஒடுக்க போர் விமானம் என்பது எல்லாம் முட்டாள்களை ஏமாற்ற செய்யும் முயற்சி? என்றது. அந்த உதவி மோசமான பொருளாதார வீழ்ச்சியில் இருக்கும் அதற்கும் பயனில்லை, உனக்கும் பயனில்லை என்று அதன் மண்ணிலேயே சொல்ல, அசிங்கப்பட்டது அமெரிக்கா. அந்த F16 ரக விமானத்தை அபிநந்தன் Mig21 என்ற பறக்கும் சவப்பெட்டியால் வீழ்த்திய இந்தியாவிற்கு, அதைவிட மேலான Tejas இருக்கிறது. எதற்காக பயம்? அதே Tejas விமானங்களை வாங்க விருப்பம் தெரிவித்த நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று என்பதை நம்மில் பலர் இன்றும் அறியவில்லை.

இன்று சீனாவில் இருந்து வந்த தொழில்கள் மட்டுமல்ல, அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிகளும் இந்தியாவில் முதலீடு செய்கிறது. காரணம் இந்திய உலகின் வருங்கால பொருளாதார சக்தி என்பது மட்டுமல்ல, சுய சார்பை நோக்கி வேகமாக வளரும் பெரிய ராணுவ சக்தி என்பதும்தான். அது தன் வலிமையை பயன்படுத்தி அமெரிக்காவைப்போல உலகத்தின் உழைப்பை, ரத்தத்தை தன் சுய நலத்திற்கு உறிஞ்சவில்லை. நியாயமான நேரங்களில் ஒரு தாயைப்போல அறவனைப்பதுமே. அது சேர்த்தது உலகத்தின் நம்பிக்கையை. ஒருபோதும் தன் நாட்டை சுவீகாரம் செய்துவிடாது என்ற அதன் தார்மீக ஒழுக்கத்தால்.

ஆக.,,இந்தியா தலையெடுக்கிறது என்பது சரியல்ல, உலகத்தில் ஒழுக்கம் தலை நிமிர்கிறது என்பதே அர்த்தம்! அது பல சுய நலவாதிகளுக்கு அச்சுறுத்தல் என்பது மறுக்க முடியாததுதான். அதனால் அதை எளிதாக அனுமதிக்காது. ஆனால் நேர்மையும், ஒழுக்கமும், நியாமும் நம் பக்கம் இருந்தால் இவர்கள் எல்லாம் எதற்கு, பரம்பொருள் அவன் இருக்கையில்!

மரு. தெய்வசிகாமணி