“இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” இல் இடம் பிடித்த ஒப்பனை போட்டி!

“இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” இல் இடம் பிடித்த  ஒப்பனை போட்டி!

பழம் காய்கறிகளை கொண்டு நடந்த ஒப்பனை போட்டி “இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” இல் இடம் பிடித்தது..!


விவசாயிகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் விதமாக, கடந்த  டிசம்பர் 28-ஆம் தேதி சென்னை வளசரவாக்கத்தில் ஒப்பனை மற்றும் நவீன ஒப்பனை போட்டி, பேஷன் ஷோ ஆகியவை “சங்கமம் 2020 திருவிழா” என்கிற பெயரில் நடைபெற்றது.

இதில் 35 ஒப்பனைக் கலைஞர்களை வைத்து பழம் மற்றும் காய்கறிகளை வைத்து வித்தியாசமான முறையில் ஒப்பனை செய்யப்பட்டு மாடல்கள் பங்கேற்றனர். இது வேறு யாரும் இதுவரை செய்யாத முயற்சி என்பதால் இந்த நிகழ்வு “இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” இல் இடம் பிடித்தது.

இந்த நிகழ்ச்சியை ஒப்பனைக் கலைஞராக 21 வருட அனுபவம் கொண்ட இலங்கேஸ்வரி முருகன் நடத்தினார்.

Related Posts

error: Content is protected !!