ரெம்டெசிவர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை!

ரெம்டெசிவர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை!

திகரித்துக் கொண்டே போகும் கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.52 லட்சத்தை தாண்டியது. மின்னல் வேகத்தில் பரவும் கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் ஊசி மருந்து பல மாநிலங்களில் பற்றாக்குறை என்ற செய்திகள் வெளியாகி உள்ளன.

கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், மற்ற மாநிலங்களிலும் தேவை அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. அதனால் உள்நாட்டுத் தேவைக்கு ரெம்டெசிவர் தட்டுப்படில்லாமல் கிடைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் கருத்தாகும்.

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்தான ரெம்டெசிவர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Related Posts

error: Content is protected !!