இந்திய கடற்படை போர் கப்பல்களில் ஹெலிகாப்டர்களை இயக்க இரண்டு பெண் அதிகாரிகள்!
சர்வதேச அளவில் ராணுவ வல்லமை படைத்த நாடுகளில் ஒன்றாக நமது இந்தியாவும் இருந்து வருகிறது. சுதந்திரம் பெற்ற காலம் முதல் இந்திய பாதுகாப்புத்துறையின் முப்படைகளிலும் ஆண் வீரர்கள் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆனால் தற்போதைய காலகட்டங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வளர்ந்து வருவதை கண்ட மத்திய அரசு, ராணுவத்தில் சமத்துவத்தை கொண்டுவர படிபடியாக முப்படைகளிலும் ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளில் பெண் களையும் நியமித்து வருகிறது.அந்த வகையில் இந்தியக் கடற்படை வரலாற்றில் முதல் முறையாக சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி மற்றும் சப் லெப்டினன்ட் ரிதி சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் இந்தியப் போர் கப்பல்களில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவர்கள் கடற்படை மல்டி-ரோல் ஹெலிகாப்டர்களில் சோனார் கன்சோல்கள், உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் மறுமதிப்பீடு (ஐ.எஸ்.ஆர்) பேலோடுகள் உள்ளிட்ட பல சென்சார்களை இயக்க, இந்த பெண் அதிகாரிகள் பயிற்சி பெறவுள்ளனர். இந்த பயிற்சிக்கு பின்னர் இரு அதிகாரிகளும் கடற் படையின் புதிய எம்.எச் -60 ஆர் ஹெலிகாப்டர்களை இயக்குவார்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
உலகில் சிறந்த மல்டி ரோல் ஹெலிகாப்டர்களாக கருதப்படும் இந்த எம்.எச் -60 ரக ஹெலி காப்டர்கள் எதிரி கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிய வடிவமைக்கப் பட்டுள்ளது, மேலும் அவை ஏவுகணைகள் மற்றும் டார்பிடோக்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் திறனையும் கொண்டுள்ளது.
இந்திய கடற்படை அதன் வரிசையில் பல பெண் அதிகாரிகளை நியமித்திருந்தாலும், பெண்கள் இதுவரை, பல காரணங்களால் போர்க்கப்பல்களில் நியமிக்கப்படாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்திய விமானப்படையில் (ஐ.ஏ.எஃப்) புதிதாக சேர்கப்பட்டுள்ள ஐந்து ரஃபேல் போர் விமானங்களில் ஒன்றை பெண் போர் விமானிகள் இயக்கலாம் என அறிவிப்பு வெளியான அடுத்த நாளிலேயே கடற்படை போர் கப்பல்களில் பெண் அதிகாரிகள் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் முதல் முதலாக போர் தளவாடங்களை பெண்கள் இயக்க அனுமதி இந்திய விமானப் படையில் இருந்து தொடங்கியது. 2016 ஆம் ஆண்டில், விமான லெப்டினன்ட் பவன்னா காந்த், விமான லெப்டினன்ட் அவனி சதுர்வேதி, மற்றும் விமான லெப்டினன்ட் மோகனா சிங் ஆகியோர் இந்தியாவின் முதல் மகளிர் போர் விமானிகளானார்கள். தற்போது 10 போர் விமானி கள் உட்பட 1,875 பெண்கள் சேவையில் இந்திய விமானப்படை சேவையில் உள்ளனர். பதினெட்டு பெண் அதிகாரிகள் நேவிகேட்டர்களாக உள்ளனர்,