நீட் தேர்வால் பாதிப்பு : தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு!

நீட் தேர்வால் பாதிப்பு : தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு!

நீட் தேர்வு இந்த ஆண்டே ரத்து ஆகும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிட ஸ்டாலின் வலியுறுத்தி உள்ள நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வுக்கு (நீட்) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் (ஜன.6) நிறைவடைகிறது.

அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளுக்கான நீட் தோவு அடுத்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது.

விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான அவகாசம் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று அவகாசம் வரும் 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

அதேபோன்று தோவு கட்டணத்தை 7-ஆம் தேதி வரை செலுத்தலாம் என்றும் தேசிய தோவு முகமை அறிவித்தது. அதன்படி நீட்டிக்கப்பட்ட அவகாசமும் திங்கட் கிழமையுடன் நிறைவுக்கு வரவுள்ளது.

நீட் தேர்வுக்கு இதுவரை தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேரும், நாடு முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் விண்ணப்பங்களை சமா்ப்பித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டைப் பொருத்தவரை, மொத்தம் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நீட் தோவினை எழுதியிருந்தனா். தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் 1.23 லட்சம் தோவெழுதியிருந்தனா். அவா்களில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றனா்.தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்கள் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.

இந்நிலையில், மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!