ஹெச்டிஎப்சி பேங்க் – மொபைல் பேங்கிங் அப்டேட் செய்யலைன்னா அக்கவுன்ட் கட்!

ஹெச்டிஎப்சி பேங்க் – மொபைல் பேங்கிங் அப்டேட் செய்யலைன்னா அக்கவுன்ட் கட்!

அடுத்த மாதத்திலிருந்து, அதாவது மார்ச் 1 முதல், நீங்கள் HDFC வங்கி மொபைல் பயன்பாட்டின் மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய முடியாது. அதாவது பிப்ரவரி 29 முதல் HDFC வாடிக்கையாளர் கள் வங்கியின் பழைய மொபைல் பயன்பாடு மூலம் எந்த பரிவர்த்தனையும் செய்ய முடியாது, ஏனெனில் பிப்ரவரி 29 முதல் இந்த பயன்பாடு செயல்படாது என வங்கி தரப்பில் இருந்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது, அதில் பழைய HDFC மொபைல் வங்கி பயன்பாடு பிப்ரவரி 29 முதல் இயங்காது என்று வங்கி தெரிவித்துள்ளது. இன்னும் சில தினங்களுக்குள் – அதாவது பிப்ரவரி 29-க்குள் HDFC மொபைல் வங்கி பயன்பாடு புதுப்பிக்கப்படாவிட்டால், பிப்ரவரி 29 மதியம் 12 மணிக்குப் பிறகு அது இயங்காது என்றும்  தெரிவிக்கின்றது.

இதனிடையே வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய புதுப்பிக்கப்பட்ட பயன்பாட்டைக் கொண்டு வந்துள்ளது. இந்த பயன்பாட்டில் சிறந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகிள் பிளே ஸ்டோரைப் பார்வையிடுவதன் மூலம் வங்கியின் இந்த புதிய பயன்பாட்டை பதிவிறக் கம் செய்யலாம். HDFC வங்கியின் இந்த புதுப்பிக்கப்பட்ட பயன்பாடு பல புதிய அம்சங்களையும் கொண்டுள்ளது, இது வாடிக்கையாளர்களின் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பா னதாக மாற்றுகிறது. HDFC -யின் மொபைல் வங்கி பயன்பாட்டின் மூலம், நுகர்வோர் பரிவர்த்தனை கள் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். காசோலை நிலை, கணக்கு மற்றும் நிலையான வைப்புத்தொகையின் சுருக்கம் (FD), m-passbook போன்ற பிற வங்கி செயல்பாடுகளையும் வாடிக்கையாளர்கள் பயன்பாட்டின் மூலம் செய்யலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ICICI, கொடாக் மகேந்திர வங்கி போன்ற வங்கிகளின் மொபைல் பயன்பாட்டில் இந்த அம்சங்கள் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது HDFC வங்கியின் மொபைல் பயன்பாட்டிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!