இளவரசர் ஹாரியும், மேகனும் இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து நீக்கம்!
சர்வதேச அளவில் உயரிய அந்தஸ்துகளில் ஒன்றான்பிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர் பொறுப்பில் இருந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் விலகுவதாக, பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
உலகின் சக்திவாய்ந்த மற்றும் பாரம்பரியமான அரச குடும்பங்களில் பிரிட்டன் அரச குடும்பமும் ஒன்றாகும். இங்கிலாந்து அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகப் போவதாக இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகனும் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர். இந்தஅரச பரம்பரைச் சொத்துகள் தங்களுக்கு வேண்டாம் என்றும் ஹாரி-மேகன் தம்பதியினர் கூறியிருந்தனர்.
இதுதொடர்பாக அரச குடும்பம் அதிருப்தியில் இருப்பதாகவும், தம்பதியினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர் பொறுப்பில் இருந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் விலகுவதாக, பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அவர்கள் இருவரும்அரச குடும்பத்திலிருந்து ஹாரி-மேகன் வெளியேற சம்மதம் தெரிவித்தார் ராணி எலிசபெத். எனவே ஹாரி-மேகன் தம்பதி இனி பிரிட்டன் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் இல்லை எனவும், இனி அவர்கள் Royal Highness என்ற பட்டத்துடன் அழைக்கப்பட மாட்டார்கள் எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பது:-
இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு, சசெக்ஸ் இளவரசர் ஹாரியும், அவரின் மனைவி இளவரசி மேகன் மார்கலும் அதிகாரப் பூர்வமாக பிரதிநிதிகளாகக் கருத மாட்டார்கள். அவர்கள் இருவரும் அரச குடும்பத்தின் இளவரசர், இளவரசி எனும் பெருமைக்குரிய பட்டத்தை இனிமேல் வைத்திருக்க மாட்டார்கள். தங்களின் குடும்ப இல்லமான பிராக்மோர் காட்டேஜ் புனரமைக்கும் பணிக்காக மக்களின் வரிப்பணமாக ரூ. 22.19 கோடி (24 லட்சம் பவுண்ட்) பெற்றதையும் திரும்பித் தருவதாக அறிவித்தனர். இந்த புதிய ஏற்பாடுகள் அனைத்தும் வரும் வசந்த காலத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் ஹாரி, மேகன் ஆகியோருடன் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பலகட்டங்களாகப் பேச்சு நடத்தியபின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஹாரி, மேகன் இருவரும் தாங்கள் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இருப்பினும், என்னுடைய ஆதரவும், குடும்பத்தின் ஆதரவும் எப்போதும் என்னுடைய பேரன் ஹாரிக்கும், மேகனுக்கும் தொடர்ந்து இருக்கும். இருவரும் குடும்பத்தின் அன்புக்குரிய உறுப்பினர்களாகவே இருப்பார்கள். கடந்த இரு ஆண்டுகளாக அவர்கள் தீவிரமாக ஆலோசித்ததையும், அனுபவித்த சவால்களையும் உணர்கிறேன், அவர்கள் சுதந்திரமாக வாழ ஆதரவு தருகிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். குறிப்பாக மேகன் எங்கள் குடும்பத்துக்குள் இணைந்தது பெருமையாக இருக்கிறது. இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் ஹாரி, மேகன் இருவரும் அமைதியான, மகிழ்ச்சியான புதிய வாழ்க்கையை தொடங்குவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அரண்மனையிலிருந்து வெளியேறும் இளவரசர் ஹாரி கனடாவில் குடியேற திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.