அஞ்சனாத்ரி மலையில் அனுமன் பிறந்தார்? ஆதாரத்துடன் அறிவிக்கிறது தேவஸ்தானம்!

அஞ்சனாத்ரி மலையில் அனுமன் பிறந்தார்? ஆதாரத்துடன் அறிவிக்கிறது தேவஸ்தானம்!

லரின் வாழ்க்கையில் திருப்பம் தரும் திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள சேஷாச்சல மலைத்தொடரில் சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, நாராயணாத்ரி, விருஷபாத்ரி, கருடாத்ரி, வேங்கடாத்ரி, நீலாத்ரி ஆகிய ஏழு மலைகள் உள்ளன. இதில், அஞ்சனாத்திரி மலையில் ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனா தேவி நீண்ட காலம் கடுமையாக தவமிருந்து, திருமலையில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் இருக்கும் ஆகாச கங்கையில் நீராடி, அதன் பயனாக ஜபாலி என்னும் இடத்தில், ஆஞ்சநேயரை மகனாக பெற்றார் என புராணங்கள் கூறுகின்றன. எனவே அஞ்சனாத்திரி மலையில் உள்ள ஜபாலியில் ஆஞ்சநேயர் அவதரித்தாரா என்று ஆய்வு மேற்கொள்ள தேவஸ்தான நிர்வாகம் ஏழுமலையான் கோயில் ஆகம ஆலோசனை குழுவிற்கு உத்தரவிட்டிருந்த நிலையில் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் அனுமன் பிறந்ததாக 13-ம் தேதி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் உரிய ஆதாரத்துடன் அறிவிக்க்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது..

திருமலை-திருப்பதி தேவஸ்தான அலுவலக பவனில் உள்ள ஜி.எல்.ஏ அலுவலகத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

திருமலையில் ஏழு மலைகள் உள்ளன. அதில் அஞ்சனாசலம் என்ற அஞ்சனாத்ரி மலை உள்ளது. அஞ்சனாதேவி தனக்கு ஒரு மகன் வேண்டும் என்பதற்காக தவம் இருந்த சிகரம். அஞ்சனாதேவிக்கு வாயு பகவான் மூலமாக ஒருமகன் பிறந்து ஆஞ்சநேயன் என்று அழைக்கப்பட்டான். அஞ்சனாதேவியின் நினைவாக இச்சிகரம் அஞ்சனாசலம் என்று அழைக்கப்படுகிறது.

மேலும் ஆஞ்சநேயர் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் பிறந்தார் என்பதற்கான ஆதாரத்துடன் நிரூபிக்க 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பல்வேறு அறிஞர்களை கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிஞர்கள் பல்வேறு கட்டங்களாக ஆழ்ந்த ஆராய்ச்சிகளை நடத்தி அனுமன் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் பிறந்தார் என்பதை நிரூபிக்க வலுவான ஆதாரங்களை திரட்டி உள்ளனர்.

அதன் விவரம் விரைவில் புத்தக வடிவில் வெளியிடப்பட உள்ளது. அனுமன் அஞ்சனாத்ரி மலையில் பிறந்தார் என்பதை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக வரும் 13-ம் தேதி யுகாதி பண்டிகை அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது”என்று அவர் தெரிவித்தார்.

Related Posts