June 2, 2023

ஆன் லைனில் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்க தடை தொடரும்!-மத்திய அரசு!

அவசியப்பொருள்களை ஆன்லைன் வர்த்தக கம்பெனிகள் விற்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. ஆன்லைன் வர்த்தக கம்பெனிகளின் வாகனங்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் பொழுது செல்லவும் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அதேசமயம் அத்தியவசியமற்ற பொருட்களை விற்க தடையும் போட்டுள்ளது!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ந்தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 14ந்தேதி வரை 21 நாட்களுக்கு இந்த உத்தரவு நடைமுறையில் இருந்தது.

கொரோனா வைரஸ் பரவுவதை மேலும் கட்டுப்படுத்த கடந்த 14 ந் தேதி முதல் அடுத்த 19 நாட்களுக்கு (மே 3 ந் தேதி வரை) ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

ஏப்ரல் 20ந்தேதி (நாளை) வரை கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும் என்றும் அதன்பிறகு அதிகம் பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் விதி விலக்குகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், ஆன்லைன் வழியே வர்த்தகம் செய்யும் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நாளை முதல் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது

இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சகம் தந்துள்ள விளக்கத்தில்,

மின்னணு சாதனங்கள், ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் விற்க கூடாது என்று கூறியுள்ளது.

ஊரடங்கு முடியும்வரை அத்தியாவசிய பொருட்களை மட்டும் ஆன்லைனில் விற்க அனுமதி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்வதற்கு ஆன்லைன் வழியே வர்த்தகம் செய்யும் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.