டிரைவிங் லைசென்சை ஆதாருடன் இணைக்க மத்திய அரசு முடிவு!

டிரைவிங் லைசென்சை ஆதாருடன் இணைக்க மத்திய அரசு முடிவு!

ஹரியானாவில் டிஜிட்டல் ஹரியானா மாநாடு-2017 நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய தகவல் தொழிநுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அரசின் பல்வேறு சேவைகளுக்கும், சலுகைகளுக்கும் ஆதார் எண்ணை மத்திய அரசு தொடர்ந்து கட்டாயமாக்கி வருகிறது.

ஏற்கெனவே, சிலிண்டர் மானியம் முதல், வங்கிக் கணக்கு, பான் எண், செல்போன் எண் உள்பட பல ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில்,ஹரியானாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரவிசங்கர் பிரசாத், ஆதார் என்பது, ஒரு மனிதரின் டிஜிட்டல் அடையாளம் என்றார்.

டிஜிட்டல் முறையில் நிர்வாகம் நடப்பது, மக்களுக்கான சேவையை விரைந்து வழங்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் . பண மோசடியைத் தடுக்கவே, ஆதாருடன் பான் எண் இணைக்க உத்தரவிடப்பட்டதாக அவர் கூறினார்.அதேபோல், ஓட்டுநர் உரிமத்துடனும் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்க திட்டமிட்டு வருவாக அவர் தெரித்தார். இதுகுறித்து மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் பேச இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!