June 7, 2023

கோபி- யின் ’அறம்’ – குறித்து ஆந்தை டீம் விமர்சனம் – அப்டேட்!

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அறம்’. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.  மூன்று ஆண்டுகளுக்கு முன்னால்  விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியதாக  சொல்லிப்பட்டு  மெகா ஹிட் என்று சொல்லப் பட்ட திரைப்படமான கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று இதே கோபி நாயனார் கோர்ட் ஏறியபோது அவருடைய நியாயம் எடுபடவில்லை என்ற குற்றச்சாட்டு அப்போது எழுந்தபோதும் அது நீரில் கரைந்துபோனது. இது குறித்து நம் ஆந்தை ரிப்போர்ட்டர் -ரில்  நண்பர் பா. ஏகலைவன் கொடுத்த ஸ்பெஷல் ரிப்போர்ட்டான நாலு இட்லி + ஒரு டீ= ‘கத்தி’ சுட்ட கதை! ரிப்போர்ட்டை இப்போதும் காணலாம்.

அதே சமயம் அப்போது நம் ரிப்போர்ட்டை நம்பாதவர்கள் பலரும்  இப்போது அறம் படத்தை பார்த்து விட்டு ஆந்தை -யை  நம்புகின்றனர்.  ஆம் அப்போது இதே  கோபி நாயனார் கத்தியது யாருடைய செவிக்கும் கேட்கவில்லை. அது நம் ஆந்தையில்தான் முதன் முதலில் வெளிப்பட்டது, இதனிடையே தனக்கு எதிராக அன்று மறுக்கப்பட்ட நீதியை  தற்போது அறம் நாயகி நயன்தாரா (மேனேஜர்) தயாரிப்பில் மீட்டு எடுத்து விட்டார் என்பது மகிழ்ச்சி. இதையடுத்து தற்போது பல்வேறு திரையுலக பிரபலங்களும் இப்படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

 அந்த வகையில்  அறம்’ குறித்து இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

‘அறம்’ – மிகச்சிறந்த அரசியல் திரைப்படம். இன்று என் குடும்பத்தினருடன் ‘அறம்’ திரைப்படம் பார்த்தேன். மிகவும் நேர்த்தியான திரைப்படம், இயக்குநர் கோபி அவர்கள் இந்த கதையை கையாண்ட விதமும், திரைக்கதை அமைத்த விதமும் மிகவும் அருமை.

நடிகர்கள் தேர்வு, ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை அனைத்தும் மிகவும் நேர்த்தி. நயன்தாரா-க்கு அவருடைய திரையுலக வாழ்வில் அற்புதமான கதாபாத்திரம். அதை அவர் உணர்ந்து மிக சிறப்பாக நடித்துள்ளார்.

இப்படத்தில் நடித்த அப்பெண் குழந்தை, குழந்தையின் அண்ணன், குழந்தையின் அம்மா, குழந்தை யின் அப்பா, எம்.எல்.ஏ என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். அக்குழந்தையின் அப்பாவாக நடித்திருந்த ராமச்சந்திரன் எனது நீண்டக்கால நண்பர்.

அனேக நாடக நடிகர்களை பயன்படுத்தி அவர்களுக்கு வாய்ப்பு அளித்த இயக்குநர் கோபி அவர்களுக்கு நன்றி. இயக்குநர் கோபி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த புத்துணர்ச்சி

இவ்வாறு சுசீந்திரன் தெரிவித்திருக்கிறார்.

‘அறம்’ படத்துடன் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படமும் வெளியாகியுள்ளதும் இந்த இயக்குநரின் கருத்தையே நம் ஆந்தை விமர்சனமாக எடுத்து கொள்ள கோபி விரும்பியதும் குறிப்பிடத்தக்கது.

 

 மார்க் 5 / 3.75