June 4, 2023

கொரோனா காலத்துக்கு பிறகும் அதிகரிக்க வாய்ப்புள்ளது வொர்க் ஃப்ரம் ஹோம்!

இன்றைய தத்து பித்துவில் நாம் வாசிக்க போவது – தங்க முட்டையிடும் வாத்தின் கடைசி முட்டையும்……120 நிமிட டெர்மினேஷன் அவகாச நிலையும்.! இந்த கொரோனா பலருக்கு கொண்டத்தை கொடுத்திருக்கிறது, நமக்கென்னப்பா மாச கடைசில சம்பளம், பெட்ரோல் செலவு இல்லை – பப் செலவு இல்லை – அனாவசிய செலவு இல்லை வரவு முழுசும் தினமும் கறி சோறும், உணவு டெலிவிரியும்னு ஜாலியா இருக்குக்கிற ஆட்களுக்கு தெரியவில்லை இது தங்க முட்டை போடும் வாத்தின் கடைசி முட்டை என்று .!.

சுய தொழில் – இவர்கள் அன்றாடம் பல பிரச்சினைகளை சந்திப்பதால் இவர் ஓரளவுக்கு தான் வீராப்பு, அவமானம் இதெயெல்லாம் ஒளித்து வைத்து முன்னேறி வர ஒரு 60 % வாய்ப்புண்டு – இல்லையெனில் அவர்கள் வேலைக்கு சென்று விடுவார் பழைய மாதிரி…..

அன்றாடம் காய்ச்சி நிலை – பெரிசா சொல்ற அளவுக்கு ஒன்னும் இல்லாமல் போகும், ஏன் என்றால் அவர்களை இந்த போஸ்ட் லாக் டவுன் ஒன்றும் பெரிதாய் பாதிக்காது – 90 % ஆட்கள் தங்கள் வாழ்க்கையை நொந்து கொண்டே ஓட ஆரம்பித்து விடுவார்கள்

இந்த மூன்றாவது ரகம் தான் தனியார் கம்பெனியில் இருப்பவர்கள், ஐடி பணியாளர்கள் – குறிப்பாக நாங்கெல்லாம் எவ்ளோ நாளானாலும் வீட்ல இருந்தே வேலை செய்ய முடியும்னு மார் தட்டி கொண்டவர்கள் கதை தான் இந்த தங்க முட்டை இடும் வாத்து கதை ஆகிப்போனது, ஆம் தெரிந்தோ தெரியாமலே அவர்கள் தங்கள் அந்நிய நாட்டு மற்றும் லோக்கல் முதலாளிகளுக்கு ஒரு சூட்சமத்தை காண்பித்து விட்டார்கள் – அது தான் – பல அடுக்கு குளிரூட்டப்பட்டுள்ள ஐ டி கம்பெனிகள், லட்சங்களில் காட்டும் கரெண்ட் பில் ஆகட்டும், பல லட்சங்கள் பில் கட்டும் கேப்கள் என்னும் கம்பெனி வண்டிகள், சப்சிடி கேண்டீன்கள், இன்சூரன்ஸ், டீம் லஞ்ச், பிளா பிளா என பல நிகழ்வுகள், பல கோடி சம்பளங்கள் என ஒரு பார்முலாவை வைத்து 20 வருடங்கள் ஓட்டிய ஆட்களுக்கு இந்த போஸ்ட் லாக் டவுன் மிக பெரிய அக்கப்போராய் அமையும்,
ஏன் என்றால் பல கோடி செலவுகள் இவர்களுக்கு மிச்சம் சம்பளத்தை தவிர – அட இவ்ளோ சேவ் பண்ண முடியுமா – மாசம் முழுதும் வீட்டில் இருந்தே பனி புரியும் ஆட்களுக்கு எதுக்கு இம்புட்டு பெரிய பிலேடிங் போக்குவரத்து லொட்டு லொசுக்குனு உணர்த்தும் நேரம்…. – நிறைய சிறு நடுத்தர கம்பெனி ஆட்களுக்கு பத்தி அல்லது முழுசா சம்பளம் வராது, ஐடி கம்பெனிகளில் நிறைய பேரை சிரைக்க ஆரம்பித்து விடுவார்கள் –

பிராஜெக்டுக்காக காத்திருக்கும் பல லட்ச பிரஷ் மற்றும் டாப் டேக்கில் உட்கார்ந்து இருக்கும் ஆட்களுக்கு கொடுக்கும் அவகாசம் வெறும் நூற்றி இருபது நிமிடங்கள் மட்டுமே வேலையை ரிசைன் செய்ய அல்லது டெர்மினேஷன் = மரியாதையா வேலையை ரிசைன் செஞ்சா மூன்று மதம் வரை சம்பளம் பைனல் செட்டில்மெண்ட்டாய் – அமெரிடிக்கவில் அதிகபட்சமாய் 1 கோடி வரை ஆட்கள் ஆல்ரெடி வேலை இழப்பு அது போக ஹெச் 1 பி வைத்திருந்தவர்கள் வேலை இழந்தால் அதிகபட்சம் 60 நாட்கள் தான் டைம் அதுக்குள்ளே வேலை கிடைக்கலையா உடனே இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் = ஏற்கனவே அங்கே வேலை இல்ல திண்டாட்டம் – வணிக நஷ்டம் – எக்கனாமி என பல ஆப்புகள் இந்த ஜொலிப்புடன் செழிப்புடன் இருக்கும் ஐடி ஆட்களை தான் டார்கெட் செய்யும் மற்றும் அவர்கள் எதிர்காலம் கஷ்டம் – Save for the Rainy Day போய் Save for the POST LOCKDOWN tragedy ஆகிவிடும் அதனால் மிக கவனமாக செலவழியுங்கள் –

லிங்குவிடிட்டி தான் முக்கியம் நாலு பிளாட், எட்டு கிரெடிட் கார்ட் – இரண்டு பெர்சனல் லோன் – ஒரு கார் இதெல்லாம் சொத்து இல்லை ஈ எம் ஐ கட்டாவிடில் அம்போ தான் – லிங்குவிடிட்டி எனப்படும் ரொக்க கையிருப்பே உங்களை அடுத்த வசந்த காலம் வரை காப்பாற்றும் – அனைவருக்கு ஈஸ்டர் வாழ்த்துக்கள்…….