குலாம்நபி ஆசாத் :காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகினார்!

குலாம்நபி ஆசாத் :காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகினார்!

கில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த குலாம் நபி ஆசாத் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார் . சில காலங்களாகவே காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்த அவர், தற்போது இம்முடிவை எடுத்துள்ளார்.கபில் சிபலை தொடர்ந்து குலாம் நபி ஆசாத்தும் விலகியுள்ளது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1973ஆம் ஆண்டு காங்கிரஸ் இணைந்த குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் உள்பட பல பொறுப்புகளை வகித்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், கட்சியில் சீர்த்திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென போர்க்கொடி உயர்த்திய ஜி – 23 அதிருப்தி தலைவர்கள் குழுவுக்கு தலைமை வகித்து வந்தார்.கட்சிக்குள் இருந்தே விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாக அவருக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கவில்லை.சில நாட்களுக்கு முன்பு அவருக்கு வழங்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் தேர்தல் பரப்புரை குழு, அரசியல் விவகாரங்கள் குழுத் தலைவர் பதவியையும் அவர் ஏற்கவில்லை.

காங்கிரஸில் இருந்து அவரது விலகல் அக்கட்சிக்கு முக்கிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பாக பிரச்னைகள் எழும்போதெல்லாம் குலாம் நபி ஆசாத்தே டெல்லியின் தூதுவராக வந்து சுமூகமாக தீர்த்து வைப்பார்.

சமீபத்தில் அவருக்கு மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. மாநிலங்களவையில் குலாம் நபி ஆசாத்துக்கு நடத்தப்பட்ட பிரியாவிடை நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அவரை வெகுவாக புழந்தார். மேலும், “நான் உங்களை ஓய்வு பெற விடமாட்டேன், தொடர்ந்து உங்கள் ஆலோசனையைப் பெறுவேன். உனக்காக என் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்” என்று தெரிவித்தார். பிரதமர் அவருக்கு புகழாரம் சூட்டியதும் அரசியல் அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!