சாமியாருக்கு கார் டிரைவராக இருந்த சீஃப் ஜட்ஜ்!
சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்பிரசாத்தை விமான நிலையத்தில் வரவேற்றதுடன், அவருக்காக காரை ஓட்டிச் சென்ற தலைமை நீதிபதி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.இந்த சர்ச்சைக்கு ஆளானவர் கவுகாத்தி ஐகோர்ட் தலைமை நீதிபதிஅஜித்சிங்.
கடந்த 5ம் தேதி கவுகாத்தியில் நடந்த வடகிழக்கு சுதேசிய மக்கள் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்க ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வந்தார். கவுகாத்தி விமான நிலையத்தில் அவரை கவுகாத்தி தலைமை நீதிபதி, அஜீத் சிங் நேரில் வந்து வரவேற்றார். தனது காரிலேயே அழைத்துச் சென்றார். அவரே டிரைவராக அமர்ந்து காரையும் ஓட்டிச் சென்றார்.
ஒரு சாமியாருக்கு ஒரு தலைமை நீதிபதி கார் ஓட்டிச்சென்றது சர்ச்சை ஆகி உள்ளது. ஐகோர்ட் விதிமுறைகளை மீறி தலைமை நீதிபதி அஜித்சிங் செயல்பட்டுள்ளார் என்று கவுகாத்தி பார் கவுன்சில் குற்றம்சாட்டியுள்ளது. இது பற்றி சுப்ரீம் கோர்ட்டில் புகார் செய்யப் போவதாகவும் கூறி உள்ளது.