விண்வெளியில் 3 நாள் சுற்றுலா பயணம் சக்சஸ்! – ஸ்பேஸ் எக்ஸ் பெருமிதம்!

விண்வெளியில் 3 நாள் சுற்றுலா பயணம் சக்சஸ்! – ஸ்பேஸ் எக்ஸ் பெருமிதம்!

மெரிக்காவிலிருந்து 4 பேர் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சுற்றுலாவாக சென்றனர். பூமியிலிருந்து 585 கிலோ மீட்டர் அப்பால் சென்ற 4 பேரும் அங்கிருந்து பூமிப்பந்தை கண்டு ரசித்தனர். மேலும் விண்வெளியில் புவிஈர்ப்பு விசை மாறுபாட்டின் தாக்கத்தையும் உணர்ந்தனர். 3 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவின் ஃப்ளோரிடா அருகிலுள்ள அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக பாராசூட் மூலம் இறங்கினர். உற்சாகத்தில் திளைத்த அவர்கள் படகு மூலம் கரைக்குத் திரும்பினர்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல கோடீஸ்வரர் எலன் மாஸ்க் என்பவருக்கு சொந்தமான தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், பொதுமக்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்த லட்சிய பயணத் திட்டத்தில் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விண்வெளிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். தொழிலதிபர் ஜாரிட் ஐசக்மேன், மருத்துவர் ஹேலே ஆர்சனாக்ஸ், அமெரிக்க விமானப்படை முன்னாள் வீரர்‌ கிறிஸ் செம்ப்ரோஸ்கி, புவிஅறிவியல் வல்லுநர் சியான் பிராக்டர் ஆகிய 4 பேரும், 3 நாட்கள் பூமியை சுற்றி வலம் வந்து, விண்வெளியில் இருந்து பூமியை புகைப்படம் பிடித்து மகிழ்ந்தனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகள் 4 பேரை சுமந்து சென்ற ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள அட்லாண்டிக் கடலில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.அடுத்து வரும் மாதங்களில் மேலும் பல விண்வெளி சுற்றுலா பயணங்கள் நிகழ உள்ளன.

error: Content is protected !!