ஐஃபோன் 8/10 முதல் தமிழ் ரெவ்யூ!

ஐஃபோன் 8/10 முதல் தமிழ் ரெவ்யூ!

ஐ ஃபோன் 10 / ஐஃபோன் 8 / ஐ ஃபோன் 8 பிளஸ் லான்ச் இன்று காலை மிக சிறப்பாக 500 கோடி டாலர் செலவில் புதிதாக கட்டப்பட்ட ஆப்பிள் அரங்கத்தில் நடந்தது.

ஐஃபோன் 8 மற்றும் 8 பிளஸ் இந்த மாதம் செப்டம்பர் 15ல் புக்கிங் பெறப்பட்டு செப்டம்பர் 22 அன்று வெளியிடப்படும்.

ஐஃபோன் X – 10 வருட ஆப்பிள் ஃபோனின் கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக ஆப்பிள் X அறிமுகப்படுத்தபடுகிறது. இந்த ஃபோன் விலை 1000 டாலருக்கு அருகில் மற்றும் இந்த ஃபோனில் ஹோம் பட்டன் ஏதும் இல்லாமல் சாம்ஸங் 8 போல முழு ஸ்க்ரீன் கொண்ட ஃபோனை இயக்க உங்கள் கருவிழி வழியே பார்த்தால் தான் ஃபோன் திறக்கும்.

ஆப்பிள் 8 / 8 பிளஸ் டாப் 10 சிறப்பம்சங்கள்….

1. முன்புறம் / பின்புறம் கண்ணாடியில் ஆன சிறப்பான டிஸைன்.
2. வாட்டர் ஃப்ரூஃப்
3. ஹெச் டி ரெட்டினா ஸ்க்ரீன்
4. வயர்லெஸ் சார்ஜிங் முதன் முதலாக.
5. வைட் ஆங்கிள் டெலிஃபோட்டோ லென்ஸ் முதன் முதலாய்.
6. ஏ 11 (பையோனிக் சிப்) பிராசஸர் சிப் ஐஃபோன் 7 விட 70% மடங்கு அதிக வேகம்.
7. ஐ ஓஎஸ் 11 – முற்றிலும் மாறுபட்ட இன்டர்ஃபேஸ்.
8. ஃபுல் ஹெச்டி எனப்படும் 4கே மற்றும் 1080பி வீடியோ எடுக்க இயலும்.
9. ஏர்போட் மற்றும் பீட்ஸ் ஹெட்ஃபோன் வயர் இல்லாமல் ப்ளூடூத் 5 டெக்னாலஜி மூலம் இயங்ககூடிய அதிசயம்.
10. ஏரோஸ்பேஸ் வகை அலுமினிய பாடி அதனால் எடை குறைந்து பேட்டரி இன்னும் 2 மணீ நேர அதிக பயன்பாடு.

ஐஃபோன் 8 விலை – 649 / ஐஃபோன் 8 பிளஸ் 799 / ஐஃபோன் பத்து – 999 டாலர்ஸ் தான். எனக்கு ஒன்னு மட்டும் போதும் அதிகமா வாங்கி அனுப்பிடாதிங்க மக்கழே

error: Content is protected !!